Vidamuyarchi X Review: ஒரு வார்த்தையில் சொல்லணும்னா வெறித்தனம்.. விடாமுயற்சி ட்விட்டர் விமர்சனம்!

சென்னை: லைகா தயாரிப்பில் கடந்த ஆண்டு வெளியான பல படங்கள் அந்த நிறுவனத்துக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி வந்த நிலையில், இந்த ஆண்டு அஜித் குமாரின் விடாமுயற்சி கண்டிப்பாக மிகப்பெரிய லாபத்தைக் கொடுக்கும் என்றே ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

அதிகாலையிலேயே பல்வேறு மாநிலங்களில் விடாமுயற்சி படம் வெளியான நிலையில், முதல் பாதி விமர்சனங்களை சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். படத்தின் டீசர், டிரெய்லர் என எல்லாவற்றிலும் ஒரு பக்காவான ஹாலிவுட் தரத்தை மகிழ் திருமேனி கொடுத்திருந்த நிலையில், படம் ஃபயராக இருப்பதாக ரசிகர்கள் விமர்சனங்களை அடுக்கி வருகின்றனர்.

vidamuyarchi vidamuyarchi review ajith kumar

மகிழ் திருமேனி தனக்கு கிடைத்த பெரிய வாய்ப்பை மிஸ் செய்யாமல் அஜித் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தக் கூடிய அட்டகாசமான ஆக்‌ஷன் படத்தை கொடுத்திருக்கிறார் என ரசிகர்கள் தியேட்டர்களில் கொண்டாடி வருகின்றனர்.

விடாமுயற்சி படம் எப்படி இருக்கு?: அஜித் குமார், அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா கசாண்ட்ரா நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் ஹாலிவுட் படமான பிரேக் டவுன் படத்தின் தழுவல் என தகவல்கள் வெளியாகின. படத்தின் முதல் பாதியை பார்த்த ரசிகர்கள் தற்போது தியேட்டரே தெறிக்குது என்றும் ஆக்‌ஷன் காட்சிகளில் அர்ஜுனையே ஓவர்டேக் செய்துவிட்டார் அஜித் குமார் என ஃபயர் விட்டு வருகின்றனர்.

வெறித்தனம்: அஜித் குமாரின் விடாமுயற்சி படத்திற்கு ஒரு வார்த்தையில் விமர்சனம் சொல்ல வேண்டுமென்றால் வெறித்தனம் என இந்த நெட்டிசன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். ஏகப்பட்ட அஜித் ரசிகர்கள் விடாமுயற்சி படத்தின் முதல் பாதி தரமான சம்பவம் என்றும் இந்த ஆண்டின் இண்டஸ்ட்ரி ஹிட் படமே இதுதான் என்றும் பதிவுகளை பறக்க விட்டு வருகின்றனர்.

யாரு அந்த பிரகாஷ்?: விடாமுயற்சி திரைப்படத்தின் இன்டர்வெல் ப்ளாக் ப்யூர் மாஸ். அஜித் குமார் மற்றும் மகிழ் திருமேனி இருவரது பிரில்லியண்ட் வொர்க் ரசிகர்களை ஒவ்வொரு ஃபிரேமையும் தியேட்டரில் கொண்டாட வைத்துள்ளது. முதல் பாதி முழுவதுமே யாரு அந்த பிரகாஷ்? என்கிற கேள்வி செம சஸ்பென்ஸாக உள்ளது. 2ம் பாதி இன்னமும் மிரட்டலாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம் என இந்த நெட்டிசன் விமர்சித்துள்ளார்.

ரொம்ப ஃபிளாட்டா இருக்கு: அஜித் குமார், த்ரிஷா, அர்ஜுன் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் ரொம்ப ஃபிளாட்டாவும் பிரெடிக்டபிளாகவும், போர் அடிக்கும் விதத்திலும் உள்ளது. ஆனால், தரமான மேக்கிங் காரணமாக படம் கிரிஞ்சாக தெரியவில்லை என இந்த நெட்டிசன் கலவையான விமர்சனத்தை கொடுத்துள்ளார்.

வெங்கி விமர்சனம்: விடாமுயற்சி திரைப்படம் ஆரம்பத்தில் கதைக்குள் செல்ல நேரம் எடுத்துக் கொள்கிறது. ஆனால், கதைக்குள் வந்தவுடன் ஏகப்பட்ட ட்விஸ்ட்டுகளை வைத்து ரசிகர்களை மிரள வைக்கிறது. முதல் பாதி முழுவதும் டீசன்ட்டாக உள்ளது. மகிழ் திருமேனி எந்தவொரு கமர்ஷியல் விஷயத்தையும் தேவையின்றி சேர்க்கவே இல்லை. நான் ஒரிஜினல் வெர்ஷன் பார்க்காத நிலையில், போர் அடிக்கவில்லை என விமர்சகர் வெங்கி தனது விமர்சனத்தைக் கொடுத்துள்ளார்.

vidamuyarchi vidamuyarchi review ajith kumar

பிரேக்டவுன் ரீமேக் தான்: அஜித் குமார் படம் என எதிர்பார்த்த அளவுக்கு விடாமுயற்சி இல்லை. ஹாலிவுட் படமான பிரேக் டவுனை அப்படியே ரீமேக் செய்து வைத்திருக்கின்றனர். நல்ல படம் தான். ஆனால், ரசிகர்கள் தியேட்டரில் கொண்டாடி பார்க்கும் அளவுக்கு எதுவுமே இல்லை. அஜித் மற்றும் த்ரிஷா காதல் போர்ஷனை மட்டும் கூடுதலாக சேர்த்துள்ளது சிறப்பு என இந்த ரசிகர் விமர்சித்துள்ளார்.

vidamuyarchi vidamuyarchi review ajith kumar

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X