Don't Miss!
- News சேலத்தில் வாக்களிக்க வந்த 2 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சோகம்.. விளக்கம் கேட்ட தேர்தல் ஆணையம்
- Technology புது ரூல்ஸ்.. தேர்தல் முடிந்ததும் அமல்.. இனி 24 மணி நேரம் தான்.. ரயில் டிக்கெட் சேவையில் 2 பெரிய மாற்றங்கள்!
- Lifestyle கோடையில் பால் கெட்டுப்போகாமல் இருக்க எளிய டிப்ஸ்..!
- Sports தீபக் சஹர் காயத்தின் நிலை என்ன? ஷர்துல் தாக்கூருக்கு மீண்டும் வாய்ப்பா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Finance ஒரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
விதார்த் நடிக்கும் புதுப்படம் அருத்தாபத்தி!
'மைனா', 'கொள்ளைக்காரன்', முதல் இடம் போன்ற படங்களில் நடித்த விதார்த், ஹீரோவாக நடிக்கும் புதிய படம் அருத்தாபத்தி.
இந்த படத்தை சஜின் வர்கீஸ் என்பவர் இயக்குகிறார். இவர் தமிழில் 'காசி', 'அற்புதத்தீவு' உள்ளிட்ட படங்களை எடுத்த இயக்குனர் வினயனிடம் அசோசியேட்டாக பணியாற்றியவர்.
இதில் விதார்த்துக்கு ஜோடியாக கொல்கத்தா மாடல் அழகி ஐஸ்வர்யா தத் நடிக்கிறார். மேலும் தம்பி ராமையா, மனோபாலா, தேவதர்ஷினி உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.
வித்தியாசமான கதையமைப்போடு, பரபரப்பூட்டும் காட்சிகள் கொண்ட த்ரில்லராக அருத்தாபத்தி உருவாகிறது.
ஒளிப்பதிவை நவாஸ் கவனிக்கிறார். இசையை லஜ்ஜாவதி பாடல் புகழ் ஜாஸி கிஃப்ட் அமைக்கிறார். இவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் படத்திற்கு இசையமைக்கிறார்.
இப்படத்தின் துவக்க விழா நேற்று சென்னை ஏ.வி.எம். ஸ்டுடியோவில் ஆரம்பமாகியது. படக் குழுவினர் பங்கேற்று குத்துவிளக்கேற்றி ஷூட்டிங்கைத் தொடங்கி வைத்தனர்.