விதார்த் நடித்த ‘ஆள்’ படத்துக்கு சிங்கப்பூர், மலேசியா உள்பட 6 அரபு நாடுகளில் தடை

சென்னை: விதார்த் நடிப்பில் அரவிந்த் கிருஷ்ணா இயக்கியுள்ள ஆள் படத்தை சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட ஆறு அரபு நாடுகளில் வெளியிட தடை விதிக்கப் பட்டுள்ளது.

('ஆள்' கேலரி)

மைனா படம் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் விதார்த். இவர் அரவிந்த் கிருஷ்ணா இயக்கத்தில் கார்த்திகா ஷெட்டி ஜோடியாக நடித்துள்ள படம் 'ஆள்'. இப்படத்தின் தயாரிப்பாளர் விடியல் ராஜூவே இப்படத்தின் வில்லன்.

இப்படம் தமிழகம் முழுவதும் வெளியாகி ஓடிக் கொண்டு இருக்கிறது.

எதிரான கருத்துக்கள்...

எதிரான கருத்துக்கள்...

ஆள் படத்தை மலேசியா மற்றும் அரபு நாடுகளில் வெளியிட தயாரிப்பாளர் விடியல் ராஜூ திட்டமிட்டிருந்தார். ஆனால், ஆள் படத்தைப் பார்த்த சில் ஆதிகாரிகள் படத்தில் முஸ்லீம்களுக்கு எதிரான கருத்துக்கள் இடம் பெற்றிருப்பதாகக் கூறியுள்ளனர்.

தடை...

தடை...

இதனால், இப்படத்தை மலேசியா உள்பட 6 அரபு நாடுகளில் வெளியிட தடை விதிக்கப் பட்டுள்ளது. இந்தியில் வெற்றி பெற்ற அமீர் என்ற படத்தின் தமிழ் ரீமேக் தான் ‘ஆள்' என்பது குறிப்பிடத்தக்கது.

விளக்கம்...

விளக்கம்...

இப்படத்தில் முஸ்லீம்களுக்கு எதிரான கருத்துக்கள் எதுவும் இடம் பெறவில்லை என்றும், தரமான படமாகவே தயாரித்துள்ளதாகவும் விடியல் ராஜூ விளக்கமளித்துள்ளார்.

போராடுவேன்...

போராடுவேன்...

மேலும், மலேசியா மற்றும் அரபு நாடுகளில் இந்த படத்துக்கு தடை விதித்திருப்பது துரதிர்ஷ்டமானது என்றும், தடையை நீக்க போராடுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X