கதைக்கு உயிரூட்டும் .. படத்தொகுப்பாளர்கள் தினம் இன்று !
சென்னை : திரைக்கு பின்னால் இருக்கும் படத்தொகுப்பாளர்களை கௌரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் மார்ச்31ந் தேதி படத்தொகுப்பாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
நாடகம் தொடங்கி சினிமா வரை படத் தொகுப்பாளர்களின் பணி அளப்பரியது. சினிமாக்கள் ப்ரேம்களில் எடுக்கபட்டு கொண்டிருந்த காலத்தில் இருந்தே படத்தொகுப்பாளர்கள் அந்த செல்லுலாய்ட் ப்ரேமை வெட்டி ஒட்டி படமாக்குவார்கள் .

சினிமா டிஜிட்டல் யுகத்தில் கால் எடுத்து வைத்த போது இந்த வேலை இன்னும் பெரியதாகியது .படத்தொகுப்பாளர்கள் ஒரு படத்தின் மிக முக்கியமான அங்கமாக மாறி போனார்கள் .ஒரு படத்தை சிறப்பாக மக்களுக்கு கொண்டு போய் சேர்க்கும் மிகப்பெரிய பொறுப்பு படத்தொகுப்பாளர்களின் கையில் உள்ளது.
பலருக்கு இந்த படத்தொகுப்பாளர்களை பற்றிய எந்த விஷயமும் தெரிவதில்லை. படத்தொகுப்பாளர்கள் யார், சினிமாவில் இவர்களின் பங்கு என்ன பலருக்கு இன்னும் புரியாதவையாக உள்ளது. இவர்களை கொண்டாடத்தான் இந்த படத்தொகுப்பாளர்கள் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31 தேதி கொண்டாடப்படுகிறது.
இவர்களை கௌரவிக்க உலகம் முழுதும் அனைத்து சினிமா விழாக்களிலும் சிறந்த எடிட்டர் என்ற ஒரு தலைப்பின் கீழ் விருதுகள் வழங்கி கௌரவிக்கபட்டு வருகிறார்கள். இது ஆஸ்காரில் இருந்து உள்ளூர் சினிமா விருது விழாக்கள் வரை உண்டு .
ஒரு படத்திற்காக எடுக்கப்படும் அத்தனை காட்சிகளையும் எது தேவை, இந்த இடத்திற்கு இந்த காட்சிக்கு பொருந்துமா என்பதை தீர்மானிப்பதே இவர்கள் தான். ஒரு படத்தொகுப்பாளர் நினைத்தால் எப்படிபட்ட மோசமாக கதையை கூட ஒரு உயிரோட்டமிக்க கதையாக மக்கள் ரசிக்கும் கதையாக கொடுக்க முடியும். அதற்கு உதாரணமாக பல படங்களை நாம் பார்த்து இருக்கிறோம்.

தமிழ் சினிமாவை பொருத்த வரையில் எடிட்டர்களின் பங்கு மிக பெரியது இவர்களுக்கு மொழி அவசியம் கிடையாது இவர்களின் ஒரே மொழி திரை மொழி மட்டுமே. இதனால் ஒரு மொழியில் வெற்றி கிடைத்தால் அனைத்து மொழிகளில் இருந்து எளிதாக அழைப்புகள் வரும் .

இயக்குனர் வெற்றிமாறனின் ஆஸ்தான படத்தொகுப்பாளர் மறைந்த கிஷோர் பற்றி வெற்றிமாறன் கூறும்போது பொல்லாதவன் படத்தை நான் வேறுமாதிரியாக எடுத்தேன் ஆனால் கிஷோர் தான் சரியான படத்தொகுப்பினால் சிறந்த படமாக மாற்றினார் என்று பதிவு செய்திருந்தார் .

தற்போது தமிழில் பிரவீன் கே.எல் ,ஆண்டனி,ரூபன் ,ஶ்ரீகர் பிரசாத்,கோபி கிருஷ்ணா,விவேக் ஹர்சன் ,பிரசன்னா ஜி.கே போன்ற முன்னணி மற்றும் திறமையான படத்தொகுப்பாளர்கள் சிறப்பாக பணியாற்றி சிறந்த படங்களை தங்களின் சிறந்த படத்தொகுப்பால் இன்னும் சிறந்த படமாக மாற்றி அமைத்து வருகிறார்கள். அவர்களை மக்கள் இன்னும் பெரிய அளவில் கொண்டாட வேண்டும் என்பது சினிமா துறையினரின் எதிர்பார்ப்பு.


Click it and Unblock the Notifications











