ஒரே டேக்.. மிரட்டும் அசுரன் கிளைமேக்ஸ்.. சமூக வலைதளங்களில் வைரலாகும் மேக்கிங் வீடியோ!

சென்னை: அசுரன் படத்தின் கிளைமேக்ஸ் சண்டை காட்சி மேக்கிங் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Recommended Video

ஒரே டேக்.. மிரட்டும் அசுரன் கிளைமேக்ஸ்.. சமூக வலைதளங்களில் வைரலாகும் மேக்கிங் வீடியோ!

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், பிரகாஷ் ராஜ், பசுபதி, டிஜே, கென் கருணாஸ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான அசுரன் திரைப்படம், வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாகக் கொண்டு அசுரன் படம் உருவானது குறிப்பிடத்தக்கது.

4வது முறை

4வது முறை

தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி இணைந்தாலே அந்த படம் ஹிட்டு தான் என ஒரு முறைக்கு 4 முறை நிரூபித்துள்ளனர். பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் என அனைத்து படங்களும் தமிழக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றனர். தேசிய விருது உள்ளிட்ட பல விருது மேடைகளையும் விருதுகளை வாரிக் குவித்துள்ளன.

கதைக்களம்

கதைக்களம்

ஆடுகளம் படத்தைத் தொடர்ந்து மண் சார்ந்த கதையை இயக்குநர் வெற்றிமாறன் தனுஷுக்காக உருவாக்கி இருந்தார். செருப்பு போடக் கூட முடியாத நிலையில் ஒரு சாராரை ஒதுக்கி வைக்கும் கூட்டத்தை எதிர்த்து போராடும் இளைஞனாகவும், மனைவி மற்றும் மகனை காப்பாற்ற ஆயுதம் ஏந்தும் அசுரனாகவும் சிவசாமி கதாபாத்திரத்தில் தனுஷ் வாழ்ந்து காட்டினார்.

சிங்கிள் டேக்

ரத்தம் தெறிக்கும் சண்டை காட்சிகளுக்கு பெயர் போன அசுரன் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த கிளைமேக்ஸ் சண்டை காட்சியின் மேக்கிங் வீடியோவை மொபைல் போனில் எடுத்த ரசிகர்கள், தற்போது அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர். ஒரே டேக்கில் நடிகர் தனுஷ் அந்த கிளைமேக்ஸ் சண்டைக் காட்சியை செய்தார் என்றும் அந்த ரசிகர் பதிவிட்டுள்ளார்.

தேசிய விருது

தேசிய விருது

தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் உருவான ஆடுகளம் படத்திற்கு தேசிய விருது கிடைத்தது. வடசென்னை படத்திற்கு தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில பல காரணங்களால் தேசிய விருது கிடைக்கவில்லை. இந்நிலையில், நிச்சயம் அசுரன் படத்திற்கு தேசிய விருது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

ஜகமே தந்திரம்

ஜகமே தந்திரம்

இந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாஸ் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் மே 1ம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக அந்த படத்தின் ரிலீசும் தள்ளிப் போகும் என தெரிகிறது.

கைவசம் நிறைய

கைவசம் நிறைய

கோலிவுட்டில் தற்போது கைவசம் நிறைய படங்கள் வைத்திருக்கும் ஹீரோவாக நடிகர் தனுஷ் வலம் வருகிறார். ஜகமே தந்திரம், கார்த்திக் நரேனுடன் ஒரு படம், ராட்சசன் ராம் குமார் படம், அண்ணன் செல்வராகவன் உடன் புதுப்பேட்டை 2, ஜவகர் மித்ரன் இயக்கத்தில் ஒரு படம் இது மட்டுமின்றி பாலிவுட்டில் அக்‌ஷய் குமார், சாரா அலி கானுடன் இணைந்து அட்ரங்கி ரே என பல படங்கள் தனுஷ் கைவசம் இருக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X