தியேட்டரில் படம் பார்த்தவருக்கு கான்ஜூரிங் பேய் பிடிச்சிடுச்சா?.. இந்த அடி அடிக்கிறாரே!

மும்பை: தியேட்டர்களில் அவ்வப்போது ரசிகர்களுக்கும் திரையரங்க ஊழியர்களுக்கும் வாக்குவாதங்கள் நடைபெற்றுள்ளது. இதனால் தியேட்டரில் இருந்து பிரச்னை செய்யும் ரசிகர்கள் வெளியேற்றப்பட்டுள்ளார்கள். அண்மையில் கூட கோவையில், கூலி படத்தை 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான் பார்க்க வேண்டும் என்ற விதிமுறைகளைத் தெரிந்து கொள்ளாமல் குழந்தைகளுடன் படம் பார்க்க வந்த குடும்பத்தினரிடம் எடுத்துச் சொன்ன திரையரங்க ஊழியர்களுடன் குடும்பத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இப்படி இருக்க கான்ஜூரிங் படம் பார்க்க தியேட்டருக்குச் சென்ற ரசிகர்கள் மாறி மாறி தாக்கிக் கொள்ளும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

கடந்த 5ஆம் தேதி வெளியான படங்களில் ஹாலிவுட் பேய் படமான தி கான்ஜூரிங் லாஸ்ட் ரைட்ஸ் என்ற படமும் வெளியானது. இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதாவது படம் பார்த்த ரசிகர்கள் படம் இதற்கு முன்னர் வந்த கான்ஜூரிங் படங்களைவிடவும் திகில் அனுபவத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்து வருகிறார்கள். படம் இந்தியாவில் மட்டும் இதுவரை சுமார் ரூபாய் 50 கோடிகளுக்கு மேல் முதல் மூன்று நாளில் வசூலித்துள்ளது. இது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. அடுத்த வார இறுதிக்குள் படம் எப்படியும் இந்தியாவில் மட்டும் ரூபாய் 100 கோடிகளுக்கு மேல் வசூலித்து விடும் என்று கூறப்படுகிறது.

Video Goes Trending Fight Between Fans at PVR Theatre in North India Conjuring The Last Rites Show

அடிதடி சண்டை: இந்நிலையில் படம் பார்க்க தியேட்டருக்கு வந்த ரசிகர்களுக்கு இடையில் அடிதடி ஏற்படும் அளவுக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக இணையத்தில் வேகமாக பரவி வரும் வீடியோவில் ரசிகர்கள் மாறி மாறி தாக்கிக் கொள்கிறார்கள். வேகமாக பரவி வரும் வீடியோவில் மொத்தம் நான்கு முதல் அதற்கும் மேற்பட்ட இளைஞர்கள் தான் மாறி மாறி தாக்கிக் கொள்கிறார்கள்.

பேய் பிடுச்சுடுச்சா?: இந்த வீடியோவில் ரசிகர்கள் பேசிக் கொள்வதைப் பார்க்கும் போது இந்த வீடியோ வட மாநிலத்தில் உள்ள ஏதோ ஒரு தியேட்டரில் எடுக்கப்பட்டிருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது. மேலும் தியேட்டரில் உள்ள மற்ற ரசிகர்கள் அந்த ரசிகர்களுக்கு இடையில் நடைபெற்ற அடிதடியைத் தடுக்க முயற்சிக்காதது குறித்து இணையவாசிகள் தங்களது ஏமாற்றத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். மேலும் சில இணையவாசிகளோ, தியேட்டரில் படம் பார்த்தவருக்கு கான்ஜுரிங் பேய் பிடிச்சிடுச்சா, இந்த அடி அடுச்சுக்கறாங்களே என்று கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

More from Filmibeat

Read more about: fans controversy fight pvr
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X