ஆர்யாவை மரண பங்கமாக கலாய்க்கும் வீடியோ மீம்... செம வைரல்!
Recommended Video

சென்னை : பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக முயற்சித்து வரும் ஆர்யா, தற்போது 'சந்தனத் தேவன்', 'கஜினிகாந்த்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சின்னத்திரைக்கு வந்திருக்கிறார் ஆர்யா. தமிழில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள கலர்ஸ் தமிழ் சேனலின் ஸ்டார் தொகுப்பாளர் ஆர்யா தான்.
'எங்க வீட்டு மாப்பிள்ளை' எனும் நிகழ்ச்சியின் மூலம் தனது வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க இருக்கிறாராம். அந்த நிகழ்ச்சியின் ப்ரொமோவை கலாய்த்து உருவாகியிருக்கும் வீடியோவை பார்த்தீங்களா?

நடிகர் ஆர்யா
'அறிந்தும் அறியாமலும்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஆர்யா, அதன் பிறகு 'நான் கடவுள்', 'மதராச பட்டினம்', 'பாஸ் என்கிற பாஸ்கரன்' உள்பட 40-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

முன்னணி நடிகராக வளரமுடியவில்லை
ஆரம்பத்தில் வேகமாக வளர்ந்து கொண்டிருந்த ஆர்யாவுக்கு கடந்த சில ஆண்டுகளாக படங்கள் சரியாக அமையவில்லை. பல படங்கள் அவருக்கு கை கொடுக்காததால் முன்னணி நடிகராகும் முனைப்பிலேயே இருக்கிறார் ஆர்யா.

சின்னத்திரையில் ஆர்யா
இந்த நிலையில் சின்னத்திரைக்கு வந்திருக்கிறார் ஆர்யா. தமிழில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள கலர்ஸ் தமிழ் சேனலின் ஸ்டார் பெர்சனாலிட்டி ஆர்யா தான். இந்த சேனலில் இன்று தொடங்கும் 'எங்க வீட்டு மாப்பிள்ளை' என்ற நிகழ்ச்சி, சுயம்வரம் பாணியில் ஆர்யாவுக்கு பெண்தேடும் நிகழ்ச்சி.

எங்க வீட்டு மாப்பிள்ளை
இதில் வெற்றி பெறுகிறவரை ஆர்யா திருமணம் செய்ய இருப்பதாகவும் கூறுகிறார்கள். கலர்ஸ் தமிழ் சேனல் இந்த நிகழ்ச்சியைத் தான் வரவேற்பு பெறும் நட்சத்திர நிகழ்ச்சியாகக் கருதுகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

ஆர்யாவுக்காக காத்திருக்கும் பெண்கள்
இந்த நிகழ்ச்சியின் ப்ரொமோ ஒளிபரப்பானது. இதில், ஆர்யாவிடம் பல இளம்பெண்கள் ப்ரொபோஸ் செய்தும், இம்ப்ரஸ் செய்தும் திருமணம் செய்துகொள்ள வேண்டுகோள் விடுக்கிறார்கள். அவர்களில் ஆர்யா யாரைத் தேர்ந்தெடுக்கிறாரோ அவருடன் தான் திருமணமாம்.
மரண கலாய்
இந்த ப்ரொமோ வீடியோவை கலாய்த்து செம வீடியோ மீம் ஒன்றை உருவாக்கி இருக்கிறார்கள் நெட்டிசன்கள். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. மிஸ் பண்ணாம பாருங்க.. சிரிப்புக்கு கியாரண்டி!


Click it and Unblock the Notifications











