இறப்பதற்கு முன் ரவிக்குமார் பேசிய கடைசி வீடியோ.. கண்ணீர் விட்டு அழுத ராதிகா சரத்குமார்

சென்னை: கே.பாலச்சந்தரின் அவர்கள், பகலில் ஒரு இரவு போன்ற படங்களில் நடித்தவர் ரவிக்குமார். இவர், சித்தி, வாணி ராணி போன்ற பல சீரியல்களிலும் நடித்து பிரபலம் அடைந்தார். உடல்நலக்குறைவால் சென்னை வேளச்சேரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ரவிக்குமார் இறந்த செய்தி அறிந்த திரை பிரபலங்கள் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அவர் இறக்கும் முன் வெளியிட்ட கடைசி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சன் டிவி தொலைக்காட்சியில் வெளியான சித்தி சீரியல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தாய்மார்களின் அன்பை பெற்ற சீரியல்களில் ஒன்று சித்தி. இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். டாப் 10 சீரியல்களில் சீரியல்களை ரசிக்கும் மக்களுக்கு பிடித்த ஒன்றாக இது இருக்கிறது. நடிகை ராதிகா கரியரில் மிக முக்கிய இடத்தை பெற்றது சித்தி. அந்த தொடரில் ஒரு முக்கிய ரோலில் நடித்தவர் ரவிக்குமார். இவர் மலையாள தொலைக்காட்சிகளில் 100க்கும் மேற்பட்ட சீரியல்களில் ரவிக்குமார் நடித்திருக்கிறார். அதேபோன்று படங்களிலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து கவனத்தை பெற்றார்.

மரணம்: சிவாஜி படத்தில் அரசியல்வாதியாக இருக்கும் ரவிக்கமார் எங்களையும் கொஞ்சம் காசு பார்க்க விடுங்க என்ற வசனம் பெரும் வரவேற்பை பெற்றது. அதேபோன்று ரமணா, மாறன், விசில், மலபார் போலீஸ் உள்ளிட்ட படங்களிலும் அவர் நடித்திருக்கிறார். இந்நிலையில், சென்னை வேளச்சேரியில் உள்ள பிரசாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உடல்நலக்குறைவால் காலமானார். ரவிக்குமாரின் மகன் இந்த செய்தியை உறுதிப்படுத்தினார். தமிழ் திரையுலகில் அடுத்தடுத்து மரணங்களால் திரை பிரபலங்களால் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

video-of-actor-ravikumar-speaking-before-his-death-goes-viral

ராதிகா சரத்குமார் இரங்கல்: சித்தி சீரியலில் ராதிகாவுடன் ரவிக்குமாரும் இணைந்து நடித்திருக்கிறார். அவரது இறந்த செய்தி அறிந்து நடிகை ராதிகா உருக்கமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது குடும்பத்தில் ஒருவர் போல இருந்தார். ரவிக்குமார் எங்களுடன் இணைந்து பணியாற்றிய அனுபவத்தை மறக்க முடியாது. அவரது சிரிப்பு மற்றும் ஆழமான குரல் எப்போதும் மனதில் இருக்கும் என ராதிகா தெரிவித்திருக்கிறார்.

கடைசி வீடியோ: இந்நிலையில், நடிகர் ரவிக்குமார் இறக்கும் முன்பு வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் டிராபிக்கால் ஏற்படும் பிரச்னையால் மக்கள் பாதிக்கப்படும் பிரச்னை குறித்து பேசியிருக்கிறார். இதில், சென்னை போன்ற மாநகரத்தில் மக்களுக்கு மிகப்பெரிய பிரச்னையாக இருப்பது சிக்னல்தான். யாரும் டிராபிக்கை பெரிதாக மதிப்பதில்லை. எனவே நீங்கள் இந்த பிரச்னையை புரிந்து கொண்டு நடந்து கொள்ள வேண்டும். எல்லோருக்கும் அவசர வேலை இருக்கிறது. அதை தவறாக சொல்லவில்லை. ஒரு உயிர் போவதால் பலர் பாதிக்கின்றனர். ஒரு குடும்பத்தின் மொத்த பாதிப்பையும் பிரதிபலிக்கிறது.

video-of-actor-ravikumar-speaking-before-his-death-goes-viral

உயிரை மதிப்போம்: விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகளால் எத்தனை குடும்பங்கள் பாதிக்கப்படுகிறது என்பதை உணர வேண்டும். ஒவ்வொருவருக்கும் உயிர் என்பது ரொம்ப முக்கியமானது. அது போனால் கிடைக்காது. ரொம்ப கவனமாக இருங்கள். சிக்னல்களை மதித்து நடந்தால் எல்லோருக்கும் மதிப்பான செயல் இருக்கும். நானும் மே மாதம் நடக்கும் டிராபிக் ஷோ நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறேன். நானும் வருகிறேன், நீங்களும் மறக்காமல் வாங்க என அழைப்பு விடுத்தார். இந்த வீடியோ வெளியான அடுத்த வாரத்தில் ரவிக்குமார் காலமானார். இவர் பேசிய இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X