அந்தரத்தில் கோளாறான ஆளில்லாத விமானம்.. அசால்டாக தரையிறக்கிய அஜித்.. கன்னாபின்னா வைரலில் வீடியோ!

By

சென்னை: அந்தரத்தில் கோளாறான ஆளில்லாத விமானத்தை நடிகர் அஜித், அசால்டாக தரையிறக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

Recommended Video

தல Ajith unseen Drone Training Video • Dhaksha Team

நடிப்பில் மட்டுமல்லாமல், மற்ற விஷயங்களிலும் கவனம் செலுத்தி வருபவர் நடிகர் அஜித்குமார்.

பைக் ரேஸ், கார் ரேஸ், போட்டோகிராபி, ஏரோ மாடலிங், சமையல் என வெரைட்டியான ரசனைகளின் மனிதர் அவர்!

ஏரோ மாடலிங்

ஏரோ மாடலிங்

கடந்த பல வருடங்களாக ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயங்கும் ஏரோ மாடலிங் செய்து வந்த அஜித், அண்ணா பல்கலைக்கழகத்தை சேர்ந்த தக்‌ஷா என்ற மாணவர்கள் குழுவுடன் இணைந்து பணியாற்றினார். அந்தக் குழுவின் ஆலோசகராகவும் இருக்கிறார் நடிகர் அஜித். ஆளில்லா விமானங்களை உருவாக்குவதற்கு அவர்களுக்கு உதவி இருக்கிறார்.

தக்‌ஷா ட்ரோன்கள்

தக்‌ஷா ட்ரோன்கள்

அவர் தலைமையிலான தக்‌ஷா குழு உருவாக்கிய ட்ரோன்கள் இந்திய அளவில் பல்வேறு போட்டிகளில் முதல் இடம் பெற்று சாதனை படைத்தன. இப்போது கொரோனா காலத்தில் வான் வழியாக கிருமி நாசினிகளை தெளிப்பதற்கு தக்‌ஷா குழுவினரின் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன. இதற்காக கர்நாடக மாநில துணை முதல்வர் அஸ்வத் நாராயண், அஜித் மற்றும் தக்‌ஷா குழுவினரை பாராட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆளில்லாத விமானம்

ஆளில்லாத விமானம்

இந்நிலையில், நடிகர் அஜித், அந்தரத்தில் கோளாறான ஆளில்லாத விமானத்தை லாவகமாக தரையிறக்கிய வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், அஜித் இயக்கும் ஆளில்லா விமானம் புறப்பட்டு வானில் பறக்கிறது. சிறிது நேரம் ரவுண்ட் அடித்த பிறகு அதை தரையிறக்குகிறார்கள். கீழே இறங்க ரெடியாகும்போது, விமானத்தின் கியர் கோளாறாகி விடுகிறது. சரியாக இறக்க முடியவில்லை.

தரையிறக்குகிறார்

தரையிறக்குகிறார்

இதையடுத்து சாமர்த்தியமாகக் கையாண்டு, அந்த விமானத்தைத் தரையிறக்குகிறார் நடிகர் அஜித். உடன் இருப்பவர்கள் அஜித்தைப் பாராட்டி கைதட்டுகிறார்கள். இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள், சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர். இது வேற லெவல் லேண்டிங் என்று அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

லாக்டவுன் காரணமாக

நடிகர் அஜித், இப்போது 'வலிமை' படத்தில் நடித்து வருகிறார். ஹெச்.வினோத் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். போனி கபூர் தயாரிக்கிறார். இந்தி நடிகை ஹூமா குரேஸி, அஜித் ஜோடியாக நடிக்கிறார். இவர் ரஜினிகாந்தின் 'காலா' படத்தில் நடித்திருந்தார். கார்த்திகேயா உட்பட பலர் நடிக்கின்றனர். லாக்டவுன் காரணமாக இதன் படப்பிடிப்பு தடைபட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X