ரெட்ரோ சூர்யாவை விட விஜய் தான் முக்கியம்.. ஸ்தம்பித்து போன விமான நிலையம்.. மாஸ் காட்டிய ரசிகர்கள்
சென்னை: விஜய்யின் அரசி என்ட்ரிக்கு பிறகு படங்களில் நடிப்பதை குறைத்து விட்டார். அவர் கடைசியாக நடிக்கும் திரைப்படம் ஜனநாயகன் என கூறப்படுகிறது. அரசியலில் இருந்தாலும் அவர் தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் என சினிமா ரசிகர்கள் கோரிக்கை வைக்கின்றனர். கடந்த வாரம் கட்சி தொடர்பாக கோவை சென்ற விஜய்க்கு அவரது ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதேபோன்று இன்று காலை மதுரை விமான நிலயைத்தில் திடீரென விஜய்யின் ரசிகர்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கட்டுக்கடங்காத கூட்டத்தால் மதுரை விமான நிலையமே ஸ்தம்பித்து போனதாக தெரிகிறது.
நடிகர் விஜய் தவெக என்ற கட்சியை தொடங்கி வழிநடத்தி வருகிறார். இதில் பெரும்பாலும் அவரது ரசிகர்களே தொண்டர்களாக இருக்கிறார்கள். சமீபத்தில் கட்சி ரீதியாக கோவை சென்றபோது விஜய்க்கு அவரது ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது ரசிகர் ஒருவர் விஜய் சென்ற வாகனத்தில் குதித்து களேபரத்தை ஏற்படு்த்தினார். இதுதொடர்பான வீடியோக்களும் வெளியாகி சர்ச்சையானது. மேலும், விஜய்க்கு உரிய பாதுகாப்பு அளிக்கவில்லை என்றும் கூறப்பட்டது. கட்சி ரீதியாக சில முடிவுகளில் வேகம் காட்டி வரும் விஜய், ஜனநாயகன் படத்திலும் மின்னல் வேகத்தில் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. ஒரு பக்கம் அரசியல், மறுபக்கம் நடிப்பு என பிஸியாக வலம் வருகிறார்.

ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் போன்ற இடங்களில் சமீபத்தில் நடைபெற்றது. படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இப்படம் விஜய்க்கு கடைசி படம் என்பதால் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கும் இப்படத்தில் விஜய்யுடன் மமிதா பைஜூ, பூஜா ஹெக்டே, பிரியாமணி, பாபி தியோல், கெளதம் மேனன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். தமிழ் திரையுலகில் விஜய் நடித்த படங்களிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு இப்படத்தின் டிஜிட்டல் உரிமை விற்கப்பட்டிருப்பது கோலிவுட்டில் ஹாட் டாபிக்காக மாறியது. அதேபோன்று சாட்டிலைட் உரிமையும் பெரும் தொகைக்கு விற்கப்பட்டிருக்கிறது. இதனால், சினிமாவை விட்டு அரசியலுக்கு போகனுமா என்ற கேள்விகளையும் திரை பிரபலங்கள் கேட்டு வருகின்றனர்.
கொடைக்கானலில் படப்பிடிப்பு: ஜனநாயகன் படப்பிடிப்பிற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் விஜய் இன்று மாலை மதுரை வருகிறார். அங்கிருந்து கொடைக்கானல் புறப்பட்டு தாண்டிக்குடி மலை கிராமத்தில் தனியார் விடுதியில் ஓய்வெடுக்கிறார். பின்னர் அங்குள்ள தயனியார் தோட்டத்தில் 3 நாட்கள் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார். படபிடிப்பு நடக்கும் மூன்று நாட்களும் தாண்டிக்குடியில் உள்ள தனியாா் விடுதியில் நடிகா் விஜய் தங்கியிருப்பாா் என்றும் கூறப்பட்டுள்ளது. அரசியல் கட்சி தொடங்கிய பின்னா் நடைபெறும் படபிடிப்பு என்பதால் கூடுதல் பாதுகாப்பில் படக்குழுவினா் கவனம் செலுத்திவருகின்றனா்.
மதுரையில் குவிந்த ரசிகர்கள்: விஜய் மதுரை வருவதை தெரிந்துகொண்ட அவரது ரசிகர்கள் மற்றும் தவெக தொண்டர்கள் இன்று காலை 6 மணிக்கே மதுரை விமான நிலையத்தில் குவிந்துள்ளனர். மாலை 4 மணிக்கு வரவிருக்கும் விஜய்க்காக காலையில் இருந்தே காத்திருக்கின்றனர். விஜய்யின் பெயரை அழைத்தும் தவெக கொடியை அசைத்தும் கூச்சலிட்டு வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா என்றும் நெட்டிசன்கள் கலாய்க்க தொடங்கிவிட்டனர். விஜய்யின் ரசிகர்கள் கூடியதால் விமான நிலையமே ஸ்தம்பித்து போனது. இன்று சூர்யா நடித்திருக்கும் ரெட்ரோ படம் வெளியாகும் நேரத்தில் விஜய் ரசிகர்கள் மாஸ் காட்டுவதாகவும் கூறப்படுகிறது. சூர்யா ரசிகர்கள் ஒரு பக்கம் ரெட்ரோவை கொண்டாடுகின்றனர். மறு பக்கம் விஜய் ரசிகர்கள் விமான நிலையத்தில் குவிந்திருப்பதும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











