பெயரை கேட்டால் சும்மா அதிருதுல்ல.. சாய் பல்லவிக்கு கிடைத்த மாஸ் ரெஸ்பான்ஸ்.. மிரண்ட நடிகைகள்
சென்னை: பிரேமம் படத்தில் அறிமுகமான நடிகை சாய் பல்லவி இந்திய அளவில் ஃபேமஸான நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். க்யூட்டான எக்ஸ்பிரெஷன், சிறந்த நடிப்பு, அட்டகாச நடனம் என அவர் தனக்கான பாதையில் சிறப்பாக நடைபோட்டுக்கொண்டிருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக அமரன், தண்டேல் ஆகிய இரண்டு படங்கள் வெளியாகின. இரண்டு படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருக்கின்றன. இந்தச் சூழலில் அவர் குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
ஜார்ஜியாவில் மருத்துவம் படித்தவர் சாய் பல்லவி. நீலகிரி மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட அவர் மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தில் அறிமுகமானார். அல்ஃபோன்ஸ் புத்திரன் இயக்கியிருந்த அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. முக்கியமாக மலர் டீச்சராக சாய் பல்லவி தனது மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். படத்தில் அவரைப் பார்த்த பலரும் இந்த நடிகைக்கு இதுவா முதல் படம் என்று ஆச்சரியம்தான் பட்டார்கள். அந்த அளவுக்கு அவரது நடிப்பு இருந்தது.

நல்ல டான்ஸர்: சாய் பல்லவி சிறந்த நடிகை என்பது மட்டுமில்லாமல் மிகச்சிறந்த டான்ஸரும்கூட. விஜய் டிவியில் நடந்த நடனம் தொடர்பான ஒரு ரியாலிட்டி ஷோவில்கூட அவர் போட்டியாளராக பங்கேற்றிருந்தார். ஆனால் அந்தப் ஷோவில் அவர் டைட்டில் வெல்ல முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. காலம் எப்படியோ அவரை சினிமாவுக்கு அழைத்து வந்துவிட்டது.
நோ மேக்கப்: அதேபோல் சாய் பல்லவியிடம் இன்னொரு ஸ்பெஷலாக ரசிகர்கள் பார்ப்பது அவரது எதார்த்தத்தைதான். பொதுவாக நடிகைகள் பெரும்பாலானோர் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது ஓவர் மேக்கப்போடு வருவார்கள். ஆனால் சாய் பல்லவியோ மேக்கப்பை அளவாக போட்டுக்கொண்டு அழகாக வருவார். அதனாலேயே பலரும் அவருக்கு ரசிகர்களாக இருக்கிறார்கள்.
அமரன், தண்டேல்: மலையாளத்தில் அறிமுகமான சாய் பல்லவி; அதற்கு பிறகு தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடிக்க ஆரம்பித்தார். கடைசியாக அவரது நடிப்பில் அமரன்,தண்டேல் ஆகிய இரண்டு படங்கள் வெளியாகின. இரண்டு படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. குறிப்பாக அமரன் திரைப்படத்தில் பல்லவியின் நடிப்புக்கு ஏகப்பட்ட ரெஸ்பான்ஸ் கிடைத்தது. தமிழ், தெலுங்கு தவிர்த்து ஹிந்தியிலும் அவர் அறிமுகமாகவிருக்கிறார். சாய் பல்லவியின் ரசிகன் நான் என்று மணிரத்னமும் கூறியிருக்கிறார்.
ட்ரெண்டாகும் வீடியோ: இந்நிலையில் சாய் பல்லவி தொடர்பான வீடியோ ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது. அதாவது அவர், ராஷ்மிகா மந்தனா, கீர்த்தி சுரேஷ் ஆகிய மூன்று பேரும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள். அப்போது கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா மந்தனா குறித்து சின்ன இன்ட்ரோ கொடுக்கப்பட்டது. அவர்களைத் தொடர்ந்து சாய் பல்லவி என்று பெயர் மட்டும்தான் சொல்லப்பட்டது. உடனே அங்கு கூடியிருந்தவர்களின் எழுப்பிய சத்தத்தாலும், கரகோஷம், விசிலாலும் அந்த அரங்கமே அதிர்ந்தது. அந்த சத்தம் நிற்க சில நிமிடங்கள் ஆகிவிட்டன. மேலும் அருகில் இருந்த ராஷ்மிகா, கீர்த்தி ஆகியோர் மிரண்டு போய் நின்றனர். இந்த வீடியோவை பார்த்த சாய் பலல்வியின் ரசிகர்கள், பேரை கேட்டாலே சும்மா அதிருதுல்ல என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











