காசு தரமாட்றாங்க.. இளையராஜா கேஸ் போடுறாரு.. நான் என்ன செய்ய?.. மகனிடம் கங்கை அமரன் கலகல
சென்னை: இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர், இயக்குநர், நடிகர் என பல திறமைகளை கொண்ட கங்கை அமரன் இயல்பிலேயே கலகலப்பானவர். அவரது பேச்சு சில நேரங்களில் சர்ச்சைகளை சந்தித்தாலும்; தனது மனதில் பட்டதை அப்படியே பேசிவிடுபவர் அவர். இப்படிப்பட்ட சூழலில் அவர் கொடுத்த ஒரு பேட்டியின்போது தனது மகன் வெங்கட் பிரபுவிடம் ஜாலியாக பேசிய விஷயம் ட்ரெண்டாகியுள்ளது.
இளையராஜாவின் சகோதரரான கங்கை அமரன் தனது சகோதரர் சினிமாவில் நுழைந்த காலகட்டத்திலேயே நுழைந்தவர். பிறகு ராஜாவின் இசைக்கு பாடல்கள் எழுதிய அவர்; தொடர்ந்து இசையமைக்கவும் செய்தார். சுவரில்லாத சித்திரங்கள், மௌன கீதங்கள், வாழ்வே மாயம் என பல படங்களுக்கு இசையமைத்தார். அவர் மிகச்சிறந்த பாடல்களை தனது இசையில் கொடுத்திருந்தாலும் அதை இளையராஜாதான் இசையமைத்தார் என பலர் கருதுவது அவரது துரதிர்ஷ்டம்தான்.
இயக்குநர் கங்கை: இது ஒருபக்கம் இருக்க இயக்குநர் அவதாரமும் எடுத்தவர் அவர். கோழி கூவுது படத்தை முதலில் எடுத்து தொடர்ந்து சில படங்களை இயக்கிய அவருக்கு; கரகாட்டக்காரன் ஒரு இயக்குநராக அவருக்கு நல்ல விசிட்டிங் கார்டாக அமைந்தது. அப்படம் கம்மியான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்போதுவரை அந்த்ப படம் பலராலும் கொண்டாடப்படுகிறது.
சூப்பர் பாடலாசிரியர்: அதேபோல் மற்ற இசையமைப்பாளர்களுக்கும் பாடல்கள் எழுதி கெத்து காண்பித்த அவர்; 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் பாடலான சரோஜா சாமா நிக்காலோ, இதுவரை இல்லாத உறவிது என பல பாடல்களை எழுதி கொண்டாட்டத்துக்கு காரணமாகவும் இருந்தார். அதுமட்டுமின்றி இப்போது சினிமாக்களில் பயன்படுத்தப்படும் ரெட்ரோ பாடல்களில் பலவற்றை கங்கை எழுதியது என்பது குறிப்பிடத்தக்கது.

கங்கை அமரன் பேட்டி: இந்நிலையில் தனியார் யூடியூப் சேனலான சாய் வித் சித்ராவுக்கு அவர் கொடுத்த பேட்டியின்போது அவரின் மகனும், இயக்குநருமான வெங்கட் பிரபு வீடியோ கால் மூலம் அவரிடம் பேசினார். அப்போது வெங்கட், 'ரெட்ரோ படத்தில் சென்யோரீட்டா ஐ லவ் யூ, டாடி டாடி ஓ மை டாடி பாடல்களை பயன்படுத்தினார்கள். நான் சொர்க்கமே என்றாலும் நம்மூர போல வருமா பாடலை பயன்படுத்தினேன்.
காசு தரமாட்றாங்க: இப்படி நீங்கள் முன்னர் எழுதிய பாடல்களை இத்தனை வருடங்கள் கழித்தும் பயன்படுத்துவதை நினைத்து பார்க்கையில் பெருமையாக இருக்கிறது' என கூறினார். அதற்கு கங்கை அமரனோ தனது பாணியில், "எல்லாம் பயன்படுத்துகிறீகள். ஆனால் பணம்தான் கொடுப்பதில்லை. அண்ணன் இளையராஜாவாவது வழக்கு தொடர்ந்துவிடுகிறார். நான் என்ன செய்வத்?' என்று கலகலப்பாக கேட்டார். இதனைப் பார்த்த ரசிகர்கள், அட மகனிடம் எவ்வளவு ஜாலியாக கங்கை பேசுகிறார். க்யூட் ரிலேஷன்ஷிப் என்று கமெண்ட்ஸ் செய்து அதனை ட்ரெண்டாக்கிவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











