சிம்பு, த்ரிஷா முன்பே 2வது கல்யாணமா?.. ராமர் வழி வந்த பிராமணர் நீங்க.. தக் லைஃப் தந்த கமல்

சென்னை: கமல்ஹாசன் சிம்பு நடித்துள்ள தக் லைஃப் படத்தின் ஜிங்குச்சா பாடல் வெளியீட்டு விழா நேற்று காலை நடைபெற்றது. இந்த விழாவில் திரை பிரபலங்கள் மற்றும் பத்திரிகையாளர்களும் கலந்துகொண்டனர். பிரம்மாண்டமாக நடந்த இந்த விழாவில் நாயகன் கமல்ஹாசன் அல்டிமேட்டான பதில் அளித்திருக்கிறார். வெளிநாட்டவர் போல் லிவிங் உறவில் இருக்கும் கமல்ஹாசனிடம் பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு அவர அசர வைக்கும் விதமான பதிலை அளித்திருக்கிறார்.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று காலை தக் லைஃப் படத்தில் இடம்பெற்றுள்ள ஜிங்குச்சா பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில், இயக்குநர் மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், அபிராமி, ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இந்த விழா மேடையில் பல சுவாரஸ்யமான சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. முதலில் பேசிய அசோக் செல்வன் ஜாம்பவான்கள் நிறைந்த இடத்தில் நானும் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என தெரிவித்தார். மேலும், சிம்புவை பற்றி பேசி வியக்க வைத்தார். மேலும், ஜோஜூ ஜார்ஜூவும் குறைவான பேச்சால் மேடையை ரசிக்க வைத்தார்.

Video of Kamal Haasan talking about marriage at Thug Life promotion goes viral

அந்த மேஜிக் இருக்கு: இதைத்தொடர்ந்து பேசிய த்ரிஷா, இந்த மேடையில் இருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது. எல்லோருக்கும் இந்த படத்தில் நடிக்க ஆசை இருக்கும். விண்ணைத்தாணடி வருவாயா படத்திற்கு பிறகு சிம்புகூட எப்போ நடிக்கப் போறீங்க கேட்டாங்க. இந்த படத்துல அந்த மேஜிக் நடந்திருக்கு. நானும் அபிராமியும் நல்ல நண்பர்கள். இருவரும் சேர்ந்து இப்படத்தில் நடித்திருக்கிறோம் என தெரிவித்தார். மேலும், மணி சார் இயக்கத்தில் ஆயுத எழுத்து, பொன்னியில் செல்வன் படத்திற்கு தக் லைஃப் படத்தில் நடித்திருக்கிறேன். நிறைய ஜாம்பவான்களுடன் நடித்திருப்பது மகிழ்ச்சி. தக் லைஃப் படத்தை பாருங்க கண்டிப்பாக எல்லோருக்கும் பிடிக்கும் என்றார்.

கொக்கி போட்ட கேள்வி: பின்னர், நிகழ்ச்சியின் விவாதத்தின் போது தொகுப்பாளினி டிடி அவரிடம் கேள்விகளை அடுக்கடுக்காக கேட்டு வந்தார். அப்போது சிம்பு, த்ரிஷாவும் கமல் அருகில் இருந்தனர். பின்னர் கமல்ஹாசன் தனது வழக்கமான குசும்புத்தனமான பேச்சால் தக் லைஃப் செய்தார். மாண்புமிகு என ஆரம்பித்த அவர், எம்.பி. ஜான் பிரிட்டாஸ் என்னிடம் வந்து உங்களை மாதிரி எதிரில் அமர்ந்து ஒரு கேள்வி கேட்டார். அவரும் எனக்கு நண்பர்தான் அவர் கேட்ட கேள்வி கொஞ்சம் கொக்கி போட்டு கோர்த்து விடுவது மாதிரி இருந்தது. அந்த சம்பவம் நடந்து 10, 15 வருடங்கள் இருக்கும். என்னை சுத்தி கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் இருக்கிறார்கள் என கமல்ஹாசன் தெரிவித்தார்.

Video of Kamal Haasan talking about marriage at Thug Life promotion goes viral

இரண்டு கல்யாணம் ஏன்?: அதனை ஆர்வத்துடன் த்ரிஷாவும், கமல்ஹாசனும் கேட்டு கொண்டிருந்தனர். அப்போது பேசிய கமல், நீங்க ரொம்ப பாரம்பரியமான பிராமணர் குடும்பத்தை சேர்ந்தவரா இருக்கீங்க. ராமரை வழிபடும் நீங்கள் இரண்டு கல்யாணம்லாம் பண்ணிருக்கீங்க என பிரிட்டாஸ் கேட்டார். அதற்கு நான் வந்து ராமர் குடும்பத்தில் இருந்து வருவதற்கும் கல்யாணத்திற்கும் என்ன சம்பந்தம் என கமல்ஹாசன் கூறியதும் அரங்கமே அதிர்ந்தது. ரசிகர்கள் கரகோசம் எழுப்பினர். த்ரிஷாவும், சிம்புவும் வியந்து பார்த்தனர். பிறகு தக் லைஃப் தரும் அளவிற்கு ஒன்றை கமல்ஹாசன் பேசி முடித்தார். நான் ராமர் இல்லை அவருடைய அப்பா தசரதன் வழி வந்தவர்கள். இன்னும் 49ஆயிரம் சொச்சம் பாக்கி இருக்கு என பிரிட்டாஸிடம் பதில் அளித்ததாக கமல் தெரிவித்தார். தற்போது இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. த்ரிஷாவும் சிம்புவை வைத்துக்கொண்டு இப்படி ஒன்றை கமல் பேசியிருப்பதற்கு நெட்டிசன்கள் கமலை கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X