சாமியே சரணம் ஐயப்பா.. இருமுடி தாங்கி சபரிமலைக்கு சென்ற நடிகர்கள்.. யார் யார் தெரியுமா?

சென்னை: காதல் திருமணம் தோல்வி, அடுத்தடுத்து படங்களில் பிஸியாக இருக்கும் நடிகர் ஒருவர் பிரபல அரசியல்வாதி கதாப்பாத்திரத்தில் நடித்தும் வருகிறார். அண்மையில் தனது ஜெயம் என்ற பெயரையும் மாற்றிக்கொண்டார். மேலும், பக்தி மாலையில் கூட்டத்திற்கு வந்ததை பார்த்து அனைவரும் வியந்து பார்த்தனர். இந்நிலையில், வரலாற்று சார்ந்த படத்தில் நடித்த போதே வந்தியத்தேவனின் நண்பனாகி விட்டார் பொன்னியில் செல்வன். இதனிடையே இருவரும் கருப்பு சட்டை அணிந்து பக்தி பரவசத்துடன் இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

காதலிக்க நேரமில்லை படத்திற்கு பிறகு ரவி மோகன் கராத்தே பாபு, ஜீனி உள்ளிட்ட பிற படங்களில் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார். கராத்தே பாபு படம் குறித்த அறிவுப்பு மற்றும் டைட்டில் கார்டு வெளியான போதே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இப்படம் திமுக அமைச்சர் சேகர் பாபுவின் கேரக்டரை குறிப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. மேலும், கராத்தே பாபு படத்தில் லெஜண்ட் நடிகர்களும் இணைந்திருப்பதால் இப்படம் ரவி மோகனுக்கு ஹிட் படமாக அமையும் என கூறப்படுகிறது. கடந்த ஆண்டு தனது வாழ்வில் எடுத்த பெரிய முடிவுக்கு பின் மும்பைக்கு தனது ஆபிஸை மாற்றிவிட்டார். அதோடு மட்டும் இன்றி தயாரிப்பு - இயக்கத்திலும் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்.

video-of-ravi-mohan-karthi-visiting-sabarimala-and-offering-darshan-goes-viral

யோகி பாபு ஹீரோ: அண்மையில் ஈஞ்சம்பாக்த்தில் கடை திறப்பு விழாவில் ரவி மோகன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் பராசக்தி படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பதாகவும் அதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெறுவதாக தெரிவித்தார். மேலும் அழகின் ரகசியம் குறித்து தெரிவித்தும் கலகலப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில், இயக்குநர் ஆக வேண்டும் என்பது ரவி மோகனின் நீண்ட நாள் ,ஆசையாக இருக்கிறது. இதுகுறித்து தில்லாலங்கடி படத்தில் நடித்தபோதே தெரிவித்தார். விஜய்யை வைத்து இயக்க ஆசை என்றும் தெரிவித்திருந்தார். விஜய் அரசியலுக்கு சென்றுவிட்டதால், அவர் தற்போது யோகி பாபுவை வைத்து இயக்க இருப்பதாக தெரிவித்திருக்கிறார். ரவி மோகன் இயக்கும் படத்தில் யோகி பாபு நடிப்பது உறுதியாகியுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சபரிமலைக்கு பயணம்: கடந்த 3 நாட்களுக்கு முன்பு நடிகர் ரவி மோகன் சபரிமலைக்கு மாலை அணிந்த நிலையில், அரசியல் மேடையில் ஏறி கலகலப்பாக பேசி ரசிகர்களை கவர்ந்தார். அவரை போன்று அவரது நெருங்கிய நண்பரான நடிகர் கார்த்திக்கும் ஐயப்பனுக்கு மாலை போட்டுள்ளார். பொன்னியில் செல்வன் படத்தில் நடித்தபோதே இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டனர். நடிகர் கார்த்தியும் ரவி மோகனும் சபரிமலைக்கு இருமுடி கட்டி சென்றிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சபரிமலைக்கு சென்றபோது மலையாள நடிகர் திலீப்புடன் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

video-of-ravi-mohan-karthi-visiting-sabarimala-and-offering-darshan-goes-viral

கார்த்திக் பக்தி பரவசம்: நடிகர் கார்த்தி தற்போது சர்தார் 2, வா வாத்தியாரே படங்களில் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார். அடுத்ததாக சுந்தர் சி படத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. ஐயப்பன் மீது பக்தி காெண்டிருக்கும் கார்த்தி கடந்த ஆண்டு இதேபோன்று மாலை அணிந்து சபரிமலைக்கு சென்றிருந்தார். அதேபோன்று தற்போத ரவி மோகனுடன், கார்த்தியும் சென்றிருக்கிறார். இருவரும் மனம் உருகி வேண்டி கொள்ளும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X