கூலி மோனிகா பாடல்.. அட செமயா ஆடிருக்கேனே.. சாண்டி மாஸ்டருக்கு முத்தம் கொடுத்த சௌபின் சாஹிர்

சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. பெரிய எதிர்பார்ப்பை சந்தித்திருக்கும் இப்படம் பெரிய வசூலை செய்யும் என்று நம்பப்படுகிறது. படத்திலிருந்து இதுவரை வெளியான இரண்டு சிங்கிள்களும் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றிருக்கின்றன. இந்நிலையில் சாண்டி மாஸ்டர் பகிர்ந்திருக்கும் வீடியோ ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.

ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்து கடைசியாக வெளியான வேட்டையன், ஜெயிலர் ஆகிய இரண்டு படங்களில் வேட்டையன் சுமாரான வரவேற்பை பெற்றது. வேட்டையன் படத்தின்போதே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்க கமிட்டாகிவிட்டார் ரஜினி. இதனால் இந்தக் கூட்டணி மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு தமிழ் திரையுலகம் மொத்தமும் எழுந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

குவிந்த நட்சத்திரங்கள்: இதில் ரஜினியுடன் சத்யராஜ், அமீர் கான், சௌபின் சாஹிர், நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன், அபிராமி என பலர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்திருக்கிறது. இப்படத்துக்காக லோகேஷ் 50 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கியிருக்கிறார். அவர் இதற்கு முன்னர் இயக்கியிருந்த லியோ சுமாரான வரவேற்பை பெற்றிருந்தாலும் லோகி வாங்கியிருக்கும் சம்பளம் ஆச்சரியத்தை உண்டு செய்திருக்கிறது.

Video of Sandy Master and Soubin Shahir watching the song Monica from the movie Coolie together
Photo Credit:

இரண்டு சிங்கிள்கள்: படமானது ஆகஸ்ட் 14ஆம் தேதி பிரமாண்டமாக ரிலீஸாகவிருக்கிறது. நிச்சயம் இப்படம் 1000 கோடி ரூபாய் வசூல் செய்வது உறுதி என ரசிகர்களும், திரைத்துறையில் ஒருதரப்பினரும் திட்டவட்டமாக கூற ஆரம்பித்து ஹைப்பை ஏற்றியிருக்கிறார்கள். ஆனால் இதுவரை படத்திலிருந்து வெளியான இரண்டு சிங்கிள்களும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்பதுதான் கள எதார்த்தமாக இருக்கிறது.

சௌபின், பூஜா செம ஆட்டம்: முதல் சிங்கிளில் டி.ராஜேந்தர் நடனம் ஆடியிருந்தார். இரண்டாவது சிங்கிளிலோ பூஜா ஹெக்டே ஆடியிருக்கிறார். அவர் மட்டுமின்றி மிகச்சிறந்த நடிகர் என்று கொண்டாடப்படும் மலையாள ஆக்டர் சௌபின் சாஹிரும் இந்தப் பாடலுக்கு நடனமாடியிருக்கிறார். அவரது நடனத்தை பெரும்பாலானோர் கொண்டாடினாலும்; ஒருதரப்பினரோ, 'சௌபினை இங்கு அழைத்து வந்து இப்படி செய்துவிட்டாரே லோகேஷ்' என்று ஓபனாகவே கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.

சாண்டி மாஸ்டரின் போஸ்ட்: இந்நிலையில் பாடலுக்கு நடனம் அமைத்த சாண்டி மாஸ்டர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்திருக்கிறார். அவரும், சௌபினும் அமர்ந்தபடி மோனிகா பாடலின் வீடியோவை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அப்போது சாண்டியை பார்க்கும் சௌபின் சாஹிர், 'எப்படியோ என்னை செமயாக ஆட வைத்துவிட்டீர்கள்' என்கிற தொனியில் சாண்டிக்கு ஒரு முத்தத்தை பரிசாக கொடுக்கிறார். இந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவ ஆரம்பித்திருக்கிறது.

சாண்டி மாஸ்டர் சொன்னது: மேலும் அந்தப் போஸ்ட்டில் சாண்டி மாஸ்டர், "மோனிகா பாடலை விரும்பியதற்காக அனைவருக்கும் நன்றி. இதில் நானும் ஒரு பங்காக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். சௌபின் சாஹிர் மிகச்சிறந்த நடிகர் என்பது நம் அனைவருக்குமே தெரியும். இப்போது நடனத்திலும் அவர் சரவெடியாக இருக்கிறார். மோனிகா பாடலில் நடனமாடியதற்காக பூஜா ஹெக்டேவுக்கு நன்றி. நீங்கள் ஒரு ஸ்டைலிஷான டான்ஸர். உங்களுடன் பணியாற்றியது சிறந்த அனுபவம். அனிருத் ராக் ஸ்டார் என்று மீண்டும் நிரூபித்துவிட்டார். என்னை எப்போதும் நம்பும் லோகேஷ் கனகராஜ் ஐயாவுக்கு நன்றிகள் பல" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X