Retro: கேமராவை பார்த்ததும் மாறிய ரியாக்ஷன்.. பேத்தியை கைத்தாங்க பிடித்து வந்த சிவக்குமார்

சென்னை: நேற்று மாலை சென்னை நேரு ஸ்டேடியத்தில் ரெட்ரோ படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. இதில், நடிகர் சூர்யாவின் குடும்பத்தினர் கலந்துகொண்டு உற்சாகத்தை ஏற்படுத்தினர். மேலும், நடிகர் சிவக்குமார் சூர்யாவை பற்றி மேடையில் பேசி அனைவரையும் கண்கலங்க வைத்தார். மேலும் இந்த இசை விழா மேடையில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. இதனை இதில் காணலாம்.

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, நாசர், ஜெயராம், ஜோஜூ ஜார்ஜ், லப்பர் பந்து சுவாசிகா, கருணாகரன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் பட ரெட்ரோ. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர்கள் நடிகைகள் பலரும் தங்களது சினிமா அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இந்த விழா மேடையின் நாயகனான இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மேடையி்ல் கனிமா பாடலுக்கு ஆட்டம் போட்டு கொண்டாடினார். மேலும், ரெட்ரோ படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை குதூகலப்படுத்தியுள்ளது. இப்படி ஒவ்வொன்றாக நேற்று நடந்த நிகழ்வுகளை நினைவு கூறலாம்.

video-of-sivakumar-bringing-his-granddaughter-to-the-retro-music-launch-event

மிகப்பெரிய வாய்ப்பு: இசை வெளியீட்டு விழாவிற்கு வந்த லப்பர் பந்து நடிகை சுவாசிகா, லப்பர் பந்து படத்திற்கு பிறகு மிகப்பெரிய மேடை கிடைத்திருக்கிறது என்றால் அது ரெட்ரோ படம் தான். இந்த படத்தில் சிறிய கதா்பபாத்திரம் செய்திருக்கிறேன் என தெரிவித்தார். மேலும், ரெட்ரோ படத்தில் சூர்யா சாரை பார்த்து வியந்திருக்கிறேன். இப்படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த கார்த்திக் சுப்பராஜ் சாருக்கு நன்றி என தெரிவித்தார். பின்பு பேசிய நடிகர் கருணாகரன், டெல்லியில் படித்த போது ஒரு தமிழ் படம் பார்க்க 3 மாதம் காத்திருக்க வேண்டியிருக்கும். இன்னைக்கு சூர்யா சார் படத்தில் நடித்திருக்கிறேன் எனக் கூறி பெருமிதம் அடைந்தார்.

23 அரியர்: காக்க காக்க படம் வந்தபோது காலேஜை கட் அடிச்சிட்டு படம் பார்க்க போனேன். அப்போ எனக்கு 23 அரியர் இருந்தது. ஏதோ விளையாட்டுக்காக சொல்லலை நிஜமாக 23 அரியர் என கருணாகரன் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், 23 அரியர் இருந்தபோதும் போலீஸ் ஆக ஆசைப்பட்டேன். அதற்காக எக்ஸாம் எழுதினேன் பெயில் ஆகிட்டேன். ஆனால், என்னுடைய நண்பர் ஐபிஎஸ் ஆனதுக்கு சூர்யா சார்தான் இன்ஸ்பிரேஷன் என கூறினார். அதே மாதிரி ஜிகர்தண்டா படத்தின் போது அசால்ட் சேது கதையை நான் பன்றேன்னு கார்த்திக் சுப்பராஜூவிடம் தெரிவித்தேன். அவர் என்கிட்ட வந்து இந்த கதையா படிச்சிங்களா என கேட்டார். நான் இல்லைனு சொல்லிட்டேன். ஆனால், படப்பிடிப்பு நடக்கும்போது பாபி ஜிகர்தண்டாவில் வர்ற சீன்ஸ்ல உண்மையாவே என்னை அடிக்க ஆரம்பிச்சுட்டாரு. ஏண்டா அசால்ட் சேது கேரக்டர் கேட்கிறியான்னு அப்போ தோணுச்சு என்று கலகலகப்பை ஏற்படுத்தினார்.

video-of-sivakumar-bringing-his-granddaughter-to-the-retro-music-launch-event

பேத்தியை அழைத்து வந்த சிவக்குமார்: இத்தனை சுவாரஸ்யங்களுக்கு நடுவில் அத்தி பூத்தார் போல் ஒரு அற்புதமான நிகழ்வு நடந்திருப்பதாக நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர். ரெட்ரோ படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்காக சிவக்குமார் குடும்பத்தோடு வந்த போது பத்திரிகையாளர்கள், கேமிராமேன்கள் சுற்றி நின்றனர். அப்போது காரில் இருந்து இறங்கிய பேத்தியை தன் பக்கம் வரவழைத்து கை தாங்கலாக பிடித்து செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது. மேலும், கேமிராமேன்களை பார்த்ததும் சிவக்குமார் இப்படி செய்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், பேத்தி மேல் தனிப்பட்ட பிரியத்தை வைத்திருப்பதாகவும் தெரிவித்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X