வெளியானது ரசிகர்கள் எதிர்பார்த்த அந்த வீடியோ.. பிகில் ஆடியோ லான்ச் இப்படித்தான் நடக்குமாம்.. வைரல்!
பிகில் ஆடியோ வெளியீட்டு விழா குறித்த முக்கியமான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.
Recommended Video
சென்னை: பிகில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா குறித்த முக்கியமான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.
இயக்குனர் அட்லி இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்து இருக்கும் பிகில் படம் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. ஸ்போர்ட்ஸ் ஜானர் படமான பிகில் அடுத்த மாதம் தீபாவளி அன்று வெளியாக உள்ளது.
கால்பந்து போட்டியை மையமாக வைத்து இந்த படம் உருவாகி உள்ளது. இதில் டான் கதையும் முக்கிய ஒரு அங்கமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் மூன்றாவது போஸ்டர் நேற்று வெளியானது.

நாளை நடக்கிறது
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வரும் செப்டம்பர் 19ம் தேதி, நாளை நடக்கிறது. சென்னை லியோ முத்து உள் அரங்கில் இந்த விழா நடக்க உள்ளது. அங்கு இருக்கும் தனியார் கல்லூரியில் இந்த விழா நடக்க உள்ளது.

யார் வழங்குகிறார்
இந்த விழாவை தொகுப்பாளினி ரம்யா தொகுத்து வழங்க இருக்கிறார். இதற்கான பிரம்மாண்ட தயாரிப்புகள் இப்போது நடந்து வருகிறது. அதேபோல் விழாவிற்கு முக்கிய சிறப்பு விருந்தினர்கள் சிலர் அழைக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று செய்திகள் வருகிறது.

என்ன
இந்த விழா மேடை மிக மிக பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என்று அட்லி உறுதியாக கூறிவிட்டார். இந்த விழாதான் படத்திற்கு முக்கிய விளம்பரம். அதனால் இதை எவ்வளவு பிரம்மாண்டமாக செய்ய முடியுமோ அவ்வளவு பிரம்மாண்டமாக செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.

பணிகள்
இதற்கான பணிகள் தற்போது நடந்து வருகிறது. இந்த விழா மேடையை அமைக்கும் பணியில் முன்னணி கலை இயக்குனர்கள் சிலர் ஈடுப்பட்டு உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் கடந்த ஒரு வாரமாக இதற்கான பணிகள் நடந்து வருகிறது என்றும் கூறுகிறார்கள். 200 பேர் இதற்கான பணி செய்து வருகிறார்கள்.

வீடியோ
இந்த விழாவில் விஜய் பேனர் கலாச்சாரம் குறித்து பேச போகிறார். விஜய் பேசும் போது மேடையில் வித்தியாசமான விளக்குகள் எரியும் வகையிலும், அவர் மீது எல்லோர் கவனமும் குவியும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. இதை அட்லி நேரடியாக பார்வையிட்டு வருகிறார்.
செம வைரல்
இந்த நிலையில் இந்த விழா ஏற்பாடுகள் குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. விழா மேடை எப்படி அமைக்கப்பட்டு வருகிறது என்று ரசிகர்கள் வீடியோ வெளியிட்டு வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











