''நடிகைக்கு முத்தம் கொடுத்தது நான் இல்லீங்கோ'': சிம்பு சொல்வதை நம்புவோர் இல்லையே!
சென்னை: இணையதளத்தில் வெளியான முத்த வீடியோவில் இருப்பவன் நான் இல்லை என்று சிம்பு கூறுவதை யாரும் கண்டுகொள்ளவே இல்லை.
மலேசியாவில் சிமா விருது விழா நடந்தபோது அங்குள்ள ஹோட்டல் ஒன்றில் ஒரு ஆணும் பெண்ணும் லிப் டூ லிப் முத்தம் கொடுத்த வீடியோ இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில் இருப்பது சிம்புவும், கன்னட நடிகை ஹர்ஷிகாவும் தான் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது.

சிம்பு
வீடியோவில் முத்தம் கொடுக்கும் நபர் நான் இல்லை. அது போலி என்று சிம்பு தனது நிலைப்பாட்டை தெரிவித்துவிட்டார்.

ஹர்ஷிகா
அய்யய்யோ அந்த வீடியோவில் முத்தம் கொடுக்கும் பெண் வேறு யாரோ. என் பெயரை தேவையில்லாமல் கோர்த்துவிட்டனர் என்று ஹர்ஷிகா தெரிவித்துள்ளார்.

முத்தம்
வீடியோவில் இருப்பது நான் இல்லை என்று சிம்பு கூறினாலும் அது அவர் தான் என்று பலரும் தெரிவித்து வருகிறார்கள். சிம்பு பேச்சை யாரும் காது கொடுத்துக் கேட்கவில்லை. வீடியோவில் இருக்கும் பெண் அடுத்தடுத்து தமிழில் ஹிட் கொடுத்துள்ள இளம் நடிகை என்று விழாவில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

செய்திருப்பார்
வீடியோவில் இருப்பது சிம்பு தான். அவர் இப்படி முத்தம் கொடுத்திருப்பார். அவருக்கு இது ஒன்றும் புதிது அல்ல. ஹன்சிகாவை அடுத்து புதிதாக யாரோ ஒருவரை பிடித்துவிட்டார் என்று சமூகவலைதளங்களில் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

நான் அவன் இல்லை
செய்வதை எல்லாம் செய்துவிட்டு நான் அவன் இல்லை என்று சிம்பு கூறுகிறார். இது உலக மகா நடிப்புடா சாமி என்று ரசிகர்கள் சிம்புவை கலாய்க்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











