காஸ்ட்லி காரில் ஊர் சுற்றிய விஜய்...வேற லெவல் வைரலாகும் வீடியோ

சென்னை : விஜய் என்ன செய்தாலும் அதை வைரலாக்கி விடுகின்றனர் அவரது ரசிகர்களும், நெட்டிசன்களும். தேர்தல் சமயத்தில் ஓட்டு போடுவதற்காக விஜய் சைக்கிளில் வந்த வீடியோ மற்றும் ஃபோட்டோக்கள் வைரலாகின.

இதைத் தொடர்ந்து தளபதி 65 படத்தின் படப்பிடிப்பிற்காக விஜய் ஜார்ஜியா சென்ற போதும் சரி, அவர் திரும்பி வந்த போதும் சரி அதை ஃபோட்டோ எடுத்து சோஷியல் மீடியாவில் போட்டு, வைரலாக்கி விட்டனர் அவரின் பாசக்கார ரசிகர்கள்.

விஜய்யை விடாத ரசிகர்கள்

விஜய்யை விடாத ரசிகர்கள்

ஜார்ஜியாவில் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை விமான நிலையத்தில் மாஸ்க் அணிந்து முகத்தை மறைத்து, தலையை குனிந்து கொண்டு தான் விஜய் சென்றார். அப்படியும் அவரை அடையாளம் கண்டுபிடித்து, வீடியோ எடுத்து வைரலாக்கி விட்டனர்.

சொகுசு காரில் சுற்றிய விஜய்

சொகுசு காரில் சுற்றிய விஜய்

அப்படி தற்போதும் சென்னையின் புறநகர் பகுதியில் விஜய் தனது காஸ்ட்லி Rolls Royce காரில் சென்றதை ரசிகர்கள் கவனித்து விட்டனர். இந்த காரை விஜய் ஓட்டிச் சென்றாரா, இல்லையா என்பது தெளிவாக தெரியவில்லை. ஆனால் விஜய் தான் காரை ஓட்டிச் சென்றதாக சொல்லப்படுகிறது.

வைரலாக்கிய நெட்டிசன்கள்

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தாறுமாறாக வைரலாகி வருகிறது. பீஸ்ட் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் விரைவில் நடைபெற உள்ளதால் அந்த பணிகளை பார்ப்பதற்கு விஜய் சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது.

சென்னையில் பீஸ்ட் பாடல்

சென்னையில் பீஸ்ட் பாடல்


பீஸ்ட் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் பாடல் காட்சி படமாக்கப்பட உள்ளதாம். இதற்காக சென்னையில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு வருகிறதாம். முதலில் முக்கிய ஆக்ஷன் காட்சி தான் சென்னையில் எடுக்கப்பட உள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது பாடல் காட்சி எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Recommended Video

என்னோட BIOGRAPHY யார் DIRECT பண்ணனும் | Actress Sona Chat Part-02 | Filmibeat Tamil
வைரலான பூஜா ஃபோட்டோ

வைரலான பூஜா ஃபோட்டோ

இரண்டு நாட்களுக்கு முன்பு கூட இந்த படத்தின் ஹீரோயின் பூஜா ஹெக்டே நடன ஒத்திகையில் ஈடுபட்ட ஃபோட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கப்பட்டது. ஹீரோயின் பூஜா ஹெக்டேவிற்கே இப்படி என்றால், விஜய் வந்தால் சும்மா இருப்பார்களா அவரின் ரசிகர்கள்.

எதிர்பார்ப்பை தூண்டிய போஸ்டர்

எதிர்பார்ப்பை தூண்டிய போஸ்டர்

நெல்சல் திலீப்குமார் இயக்கும் பீஸ்ட் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்த படத்தின் இரண்டு போஸ்டர்களும் இந்திய அளவில் சாதனை படைத்து விட்டன. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பை இப்போதே அதிகரிக்க துவங்கி விட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X