𝑺𝒉𝒂𝒓𝒊𝒒 𝑯𝒂𝒔𝒔𝒂𝒏: வளைகாப்பு முடிஞ்சாச்சு.. ஷாரிக் ஹாசன் மனைவி மரியாவின் பேபி பம்ப் வீடியோ!

சென்னை: பிரபல நடிகர்கள் ரியாஸ் கான் மற்றும் உமா ரியாஸ் கானின் மகன் ஷாரிக் ஹாசன். இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தான் காதலித்து வந்த மரியா ஜெனிஃபரை கிறிஸ்தவ முறைப்படியும், இந்து முறைப்படியும் திருமணம் நடைபெற்றது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதியர் கடந்த மாதம் வளைகாப்பு கொண்டாடிய நிலையில் இவர்கள் இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்களது பேபி பம்ப் வீடியோவை வெளியிட்டுள்ளார்கள். இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

பிரபல வில்லன் நடிகர் ரியாஸ் கான். இவரது மகனும் நடிகருமான ஷாரிக் ஹாசன். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் மரியா ஜெனிஃபர் என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளார். அதில் மரியா ஜெனிஃபருக்கு ஷாரிக் ஹாசனை விட வயது அதிகம் என கூறப்படுகிறது. மேலும் அவர் ஏற்கனவே திருமணமானவர். மரியா ஜெனிஃபரின் முதல் திருமணத்தில் அவருக்கு மகள் உள்ளார்.

Actor shariq hassan Shares Their Baby Bump Video With His Wife Maria Hassan- Watch

இப்படியான நிலையில் தான் இவர்களின் திருமணம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. அப்படி இருக்கும்போது இந்த தம்பதியருக்கு வாழ்த்துகள் குவிந்தது. திருமணத்திற்கு பிறகு பேட்டி அளிக்கும் போது அவர்களின் காதல் கதை பலருக்கும் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்தது. மேலும் வயது வித்தியாசம் தொடர்பான கேள்விக்கு காதலுக்கு வயது ஏது என அசால்ட்டாக பதில் அளித்து விட்டார்கள்.

பேபி பம்ப்: இவர்களுக்கு திருமணமாகி இந்த மாதத்தோடு 9 மாதங்கள் ஆகிறது. இந்நிலையில் இவர்கள் இருவரும் கர்ப்பமாக இருப்பதாக சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்தனர். இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. இப்போதுதான் திருமணம் ஆனது. அதற்குள் கர்ப்பமா என்றெல்லாம் கேள்வி எழுப்பினார்கள். அதேபோல் கடந்த மாதம் அதாவது மார்ச் மாதத்தில் இவர்களுக்கு வீட்டில் வளைகாப்பு நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

வீடியோ: இந்நிலையில் இவர்கள் தங்களது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்களது பேபி பம்ப் வீடியோவை வெளியிட்டுள்ளார்கள். இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதாவது பேபி பம்பை இருவரும் பிடித்துக் கொண்டும், உதட்டு முத்தம் கொடுத்துக் கொண்டும் வாஞ்சையாக ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்துக் கொண்டும் எடுத்த புகைப்படங்களை வீடியோவாக மாற்றி பகிர்ந்துள்ளார்கள்.

Actor shariq hassan Shares Their Baby Bump Video With His Wife Maria Hassan- Watch

கேப்ஷன்: இந்த வீடியோவுக்கு ஷாரிக் ஹாசன், ' இப்படியான மரியாவை தான் நான் பார்க்க நீண்ட நாட்களாக ஆசைப்பட்டேன். மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்துக் கொண்டும், காதலில் நாங்கள் இருவரும் மூழ்கி இருக்கும் இந்த தருணம் அவளால் உருவானவை. அவளுக்கு அருகில் இருப்பதால் நான் அதிர்ஷ்டசாலியாக இருக்கிறேன்' என கேப்ஷனும் இட்டுள்ளார். அவர்களின் வீடியோவுக்கு லைக்குகள் விழுந்து கொண்டு உள்ளன. இது மட்டும் இல்லாமல் ரசிகர்கள் பலரும், நலமுடன் குழந்தையை பெற்றெடுக்க வாழ்த்துகள் என தெரிவித்து வாழ்த்தி கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X