Pooja Hegde: வருண் தவானுடன் ரெட்ரோ படம் பார்த்த பூஜா ஹெக்டே.. அடடே.. எந்த சீட்னு பார்த்தீங்களா?

லண்டன்: இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், பிரகாஷ் ராஜ், நாசர் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி நேற்று அதாவது மே 1ஆம் தேதி வெளியான படம் ரெட்ரோ. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சூர்யா இந்த படத்தை தயாரித்துள்ளார். படம் வெளியாகி ஓடிக்கொண்டு உள்ள நிலையில் படத்தில் நடித்துள்ள நடிகை பூஜா ஹெக்டே பாலிவுட் நடிகர் வருண் தவானுடன் இணைந்து, ரெட்ரோ படத்தை லண்டனில் பார்த்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

ரெட்ரோ சூர்யாவின் 44வது படம். இந்த படத்தின் அறிவிப்பு வந்ததில் இருந்து படத்தின் மீது ரசிகர்களுக்கு தனி எதிர்பார்ப்பு இருந்தது. படத்தின் படப்பிடிப்பு வேலைகள் கடந்த ஆண்டு முடிந்து விட்டது. ஆனால், கங்குவா படத்தின் ரிலீஸ்க்காக காத்துக் கொண்டு இருந்தார்கள். கங்குவா படம் சரியாக போகாததால், இந்த படத்தின் ரிலீஸ் கொஞ்சம் தள்ளி வைத்துக் கொள்ளலாம் என திட்டமிட்டு படத்தை மே மாதத்தில் ரிலீஸ் செய்துள்ளனர்.

Actress Pooja Hegde Watch Retro Movie With Varun Dhawan At London - Watch Video

விமர்சனம்: படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. சிலர் இந்த படத்தை பொறுமையாக அமர்ந்து பார்த்தால் பிடிக்கும் எனவும், சிலரோ, கார்த்திக் சுப்புராஜின் மரண சொதப்பல் எனவும், சூர்யா நன்றாக நடித்துள்ளார். ஆனால் படத்தின் கதை மிகவும் சுமாரான கதை என்றும் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.

பூஜா ஹெக்டே: படம் பார்த்த ரசிகர்கள் பலரும் கூறுவது இந்த படத்தின் இசை மிகவும் சிறப்பாக உள்ளது என்று கூறினார்கள். மேலும் கனிமா பாடலில் பூஜா ஹெக்டே அசத்திவிட்டார் என்றும் கூறினார்கள். பூஜா ஹெக்டே தற்போது தென்னிந்திய சினிமாவில் மட்டும் இல்லாமல் இந்தி சினிமாக்களிலும் நடிக்க வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார். இவர் தற்போது நடிகர் வருண் தவானுடன் அதிகம் ஒன்றாக சுற்றி வருகிறார். பூஜா ஹெக்டே விஜய்யின் கடைசி படமான ஜன நாயகன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கொடைக்கானலில் நடைபெற்று வருகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. இது மட்டும் இல்லாமல், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி உள்ளார் என்றும் அவரது கதாபாத்திரம் படத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

Actress Pooja Hegde Watch Retro Movie With Varun Dhawan At London - Watch Video

வருண் தவான்: இவர்கள் இருவரும் ஒன்றாக அடிக்கடி வெளியே சுற்றுவதால் இருவரும் டேட்டிங் செய்வதாக கூறி வருகிறார்கள். இதற்கிடையில் நேற்று அதாவது மே 1 ஆம் தேதி வெளியான ரெட்ரோ படத்தை நடிகை பூஜா ஹெக்டே, நடிகர் வருண் தவான் உடன் இணைந்து லண்டனில் உள்ள தியேட்டரில் பார்த்துள்ளார். இது மட்டும் இல்லாமல் இருவரும் தியேட்டரின் கடைசி வரிசையில் இருக்கும் சீட்டில் அமர்ந்து கொண்டு படம் பார்க்கிறார்கள். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. பலர் இந்த வீடியோவுக்கு லைக்குகளை வாரி வழங்கி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X