ஆண்டிப்பட்டி கனவா காத்து ஆள தூக்குதே”… சீனாவில் தமிழில் பாட்டு பாடி அசத்திய சீனர்!
சென்னை : தர்மதுரை திரைப்படத்தில் இடம் பெற்ற ஆண்டிப்பட்டி கனவா காத்து ஆள தூக்குதே, என்ற பாடலை சீனாவில் நடைபெற்ற திருமண விழாவில் சீனர் ஒரு பாடி அசத்தி உள்ளார்.
அந்த வீடியோவை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது முக நூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், பாட்டுப்பாடிய சீனரை ஆஹா ஓஹோ என புகழ்ந்து வருகின்றனர்.

தர்மதுரை
இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் 2016ம் ஆண்டு வெளியான திரைப்படம் தர்மதுரை. இத்திரைப்படத்தில்,விஜய் சேதுபதி, தமன்னா, ஸ்ருஷ்டி டாங்கே, ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா சரத்குமார் என ஏராளமானோர் நடித்திருந்தனர்.

வெற்றி பெற்றது
காதல், குடும்ப பின்னணிக் கொண்ட இத்திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் கேரக்டர் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் கதாபாத்திரமாக இருக்கும். இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். இத்திரைப்படம் திரையரங்கில் வெகுநாட்கள் ஓடி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.
சீனர் பாடிய தமிழ் பாடல்
இந்நிலையில், இத்திரைப்படத்தில் இடம் பெற்ற ஆண்டிப்பட்டி கனவா காத்து ஆள தூக்குதே என்ற பாடலை சீனாவில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சீனர் ஒருவர் அழகாக பாடி அனைவரின் கைதட்டலையும் பெற்றுள்ளார். அந்த சீனர் பாடலை பாட பாட அங்கு இருந்தவர்கள் குஷியில் ஆட்டம் போட்டனர். இந்த வீடியோவை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது முக நூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் தமிழில் பாட்டுப்பாடி அசத்திய அந்த சீனரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

லீட் ரோலில்
கபெ ரணசிங்கம் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான திட்டம் இரண்டு, பூமிகா போன்ற திரைப்படங்கள் மிகுந்த வரவேற்பை பெற்றன.

கைவசம் பல படங்கள்
ஐஸ்வர்யா ராஜேஷ் கைவசம் டிரைவர் ஜமுனா, மோகன்தாஸ், தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் தமிழ் ரீமேக், துருவ நட்சத்திரம் ஆகிய படங்கள் உள்ளன. இதுதவிர தெலுங்கில் ரிபப்ளிக், பீம்லா நாயக் போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications