GBU: சரிந்து விழுந்த அஜித்தின் ராட்ஷச கட்-அவுட்.. திருநெல்வேலி தியேட்டரில் நடந்த பகீர் சம்பவம்!
திருநெல்வேலி: நடிகர் அஜித் குமார் நடிப்பில் வரும் 10ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள படம், குட் பேட் அக்லி. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இப்படியான நிலையில் அஜித் ரசிகர்களுக்கு இந்த படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளதால், படத்திற்கு மாஸான ஓப்பனிங் கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் வெறித்தனமாக வேலை பார்த்துக் கொண்டு உள்ளார்கள். இதில் திருநெல்வேலியில் உள்ள தியேட்டர் வளாகத்தில் அமைக்கப்பட்டு வந்த அஜித்தின் கட்-அவுட் சரிந்து விழுந்தது.
அஜித் குமார் நடிப்பில் வரும் வியாழக்கிழமை வெளியாகவுள்ள படம் குட் பேட் அக்லி. இந்த படத்தில் அஜித்துடன் த்ரிஷா, சிம்ரன், பிரபு, பிரசன்னா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தில் அஜித்துக்கு வில்லனாக ஜாக்கி ஷெராஃப், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்திற்கான அட்டகாசமான தீம் மியூசிக் கொடுத்துள்ளதால், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

அஜித்: குட் பேட் அக்லி படம் அஜித்தின் 63வது படம். இந்த படத்தை தயாரிப்பதன் மூலம் தமிழில் காலடி எடுத்து வைக்கிறார்கள், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம். இந்த படத்தின் அறிவிப்பு வந்ததில் இருந்து ரசிகர்கள் இணையத்தில் ஆதரவைக் கொடுத்து வந்தார்கள். குறிப்பாக படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை மில்லியன் கணக்கில் எக்ஸ் பக்கத்தில் பார்த்தார்கள். இது தனி சாதனை படைத்தது. அஜித்க்கு இந்த ஆண்டில் வெளியாகும் இரண்டாவது படம் குட் பேட் அக்லி. ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதத்தில் வெளியான விடாமுயற்சி படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவு வரவேற்பை பெறவில்லை.
சாதனை: ஆனால் குட் பேட் அக்லி படத்தின் மீது ரசிகர்களுக்கு ஆரம்பத்தில் இருந்தே நல்ல வரவேற்பு இருந்ததால், படத்தின் ரிலீஸ்க்காக காத்துக் கொண்டு உள்ளார்கள். ஏற்கனவே, படத்தின் டீசர், டிரைலர் மற்றும் இரண்டு பாடல்களை படக்குழு வெளியிட்டுள்ளார்கள். இவை அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால், படம் ரிலீஸ் ஆகும் தினத்தில் தியேட்டரில் திருவிழா கொண்டாட தயாராகி வருகிறார்கள் அஜித் ரசிகர்கள். படத்தின் டீசரை 24 மணி நேரத்தில் யூடியூப் தளத்தில் 32 மில்லியன் பார்வைகளை கடந்தது. அதேபோல் டிரைலர் 32 மில்லியன் பார்வைகளை கடந்தது. இதன் மூலம் தமிழ் சினிமா வரலாற்றில் 24 மணி நேரத்தில் அதிகமானோரால் பார்க்கப்பட்ட டிரைலர் மற்றும் டீசர் என்ற சாதனையைப் படைத்தது.

கட் -அவுட்: படம் ரிலீஸ் ஆக இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இடையில் உள்ளதால், ரசிகர்கள் தமிழ்நாடு முழுவதும் தியேட்டர்களில் கட்-அவுட்கள் வைப்பது மற்றும் பேனர்கள் வைப்பது என பரபரப்பாக செயல்பட்டு வருகிறார்கள். இப்படியான நிலையில் திருநெல்வேலியில் உள்ள PSS மல்டிப்ளெக்ஸ் திரையரங்கில் அஜித் ரசிகர்களில் ஏற்பாட்டில் கட்-அவுட் வைக்கப்படும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் தியேட்டர் உயரத்தை விட மிகவும் உயரமான கட்-அவுட் அதாவது சுமார் 200 அடிக்கு கட்-அவுட் அமைக்கப்பட்டு கொண்டு இருந்தது. மாலை நேரத்தில் மிகவும் பலத்த காற்று வீசியதால் கட்-அவுட்க்கு அமைப்பட்ட ஆங்கிள்கள் ஆடியது. இதனால், தொழிலாளர்களும் ரசிகர்களும் கவனமாக செயல்பட்டு உடனே அங்கிருந்து வெளியேறினார்கள். காற்றில் கட்-அவுட் முற்றிலும் சரிந்து விழுந்தது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ள விமர்சகரான ப்ளூ சட்டை மாறன், அதிக உயரங்களில் கட்-அவுட் வைப்பதற்கு தமிழ்நாடு அரசு தடை விதிக்குமா என கேள்வி எழுப்பியுள்ளார். இவரது இந்த கேள்வியும் இணையவாசிகள் மத்தியில் கவனம பெற்றுள்ளது.
குட் பேட் அக்லி படத்தின் அறிவிப்பு வந்ததில் இருந்து படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. குறிப்பாக படத்தின் முதல் அறிவிப்பான டைட்டிலில் தொடங்கி, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், அடுத்தடுத்து அப்டேட்கள் என அனைத்துமே ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போனது. இதில் படத்தின் டீசர் ரசிகர்களை உலக அளவில் கவர்ந்தது. டீசர் மட்டும் 24 மணி நேரத்தில் 32 மில்லியன் பார்வையாளர்களை கடந்து, யூடியூப் தளத்தில் சாதனை படைத்தது. இதன் மூலம், 24 மணி நேரத்தில் அதிகமான பார்வைகளைக் கடந்த தமிழ் படத்தின் டீசராக இந்த டீசர் அமைந்தது. சுமார் ஒரு வார காலத்திற்கு யூடியூபில் டிரெண்டிங்கிலும் இருந்தது.
டீசர் ரிலீஸின் போது, டீசரை ரசிகர்களுக்காக தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டது. ரசிகர்கள் தியேட்டரில் டிசனை கொண்டாடினார்கள். குறிப்பாக டீசர் ரிலீஸ் தினத்தையே, படம் ரிலீஸ் ஆன நாள் போல மாற்றிவிட்டார்கள். போதாகுறைக்கு படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தின் வெறித்தனமான ரசிகர் என்பதால், அவரும் தியேட்டருக்கு சென்று, ரசிகர்களுடன் டீசரைப் பார்த்தார். ஆதிக் படத்தில் இடம் பெற்றுள்ள ஓ.ஜி. சம்பவம் என்ற பாடலைப் பாடியுள்ளார்.
இசை: கடந்த சில வாரங்களாகவே படத்தின் அப்டேட்கள் வெளியிடப்பட்டு வருகிறது. பாடல் வரிகள் அஜித்தை மனதில் வைத்து பார்த்து பார்த்து எழுதப்பட்டதால், ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். டிரைலகுக்காக ரசிகர்கள் கொஞ்சம் கூடுதலாக காத்திருக்க வேண்டியாதாகிவிட்டது.
கடந்த 4ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட்ட டிரைலரில் இடம் பெற்ற அஜித்தின் முந்தைய படங்களின் ரெஃபரன்ஸ் எல்லாம் வேற லெவலில் இருந்தது. குறிப்பாக ஒத்த ரூபாயும் தாரேன் பாடல் இடம் பெற்றது அஜித் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக அமைந்தது.
சாதனை: குட் பேட் அக்லி டிரைலரை 24 மணி நேரத்தில் மட்டும் 32 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்தது என படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதன் மூலம் தமிழ் சினிமாவில் 24 மணி நேரத்தில் அதிக பார்வையாளர்களை கடந்த டிரைலர் என்ற சாதனையை அஜித் குமாரின் குட் பேட் அக்லி படத்தின் டிரைலர் படைத்துள்ளது. இதற்கு முன்னர் விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தின் டிரைலர், 24 மணி நேரத்தில் 31 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து முதல் இடத்தில் இருந்தது. தற்போது முதல் இடத்திற்கு அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் டிரைலர் சாதனை படத்துள்ளது.


Click it and Unblock the Notifications











