விடாமுயற்சியை காப்பாற்ற விஜய் ரசிகர்களின் தயவை எதிர்பார்க்கும் படக்குழு? பிரபலம் சொன்ன ஷாக் தகவல்!
சென்னை: பிப்ரவரி மாதம் பிறந்து விட்டது, அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் உள்ளனர். சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக எடுக்கப்பட்டு, வரும் 6ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள படம், விடாமுயற்சி. அஜித், த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா என பெரும் நட்சத்திரப்பட்டாளமே படத்தில் நடித்துள்ளது. படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். லைகா தயாரித்துள்ள இந்தப் படம் இன்னும் 5 நாட்களில் அதாவது வரும் 6ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இப்படியான நிலையில் படம் குறித்தான ஒரு தகவலை அந்தணன் தெரிவித்துள்ளது, பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.
மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் டீசர், டிரைலர், பாடல்கள் என அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினைப் பெற்றது. இப்படியான நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது. இந்நிலையில் படம் வெற்றி பெற, அதிக வசூலை ஈட்ட, படக்குழு தரப்பில் சில விஷயங்கள் நடைபெறுவதாக வலைப்பேச்சு அந்தணன் கூறியுள்ளார். இது பலரது கவனத்தினைப் பெற்றுள்ளது.

விடாமுயற்சி: அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான படம் துணிவு. இந்தப் படம் கடந்த 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆனது. அப்போது விஜய்யின் வாரிசு படமும் சேர்த்து ரிலீஸ் ஆனது. இப்படியான நிலையில், இரு படங்களும் போட்டி போட்டுக்கொண்டு ஓடியது. இரண்டு படங்களுக்கும் கிட்டத்தட்ட ஓரளவுக்கு வசூல் குவித்தது. அதன் பின்னர் விஜய் நடிப்பில் இரண்டு படங்கள் ரிலீஸ் ஆகிவிட்டது. ஆனால் அஜித் நடிப்பில் ஒரு படம் கூட ரிலீஸ் ஆகிவிட்டது. ஆனால், அஜித் நடிப்பில் ஒரு படம் கூட ரிலீஸ் ஆகவில்லை.

சுரேஷ் சந்திரா: இப்படியான நிலையில் அஜித்தின் விடாமுயற்சி படம் வரும் 6ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இப்படியான நிலையில், அஜித்தின் மேலாளர், ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில், விஜய் கட்சி தொடங்கியதற்கு அஜித்தும், அஜித் கார் ரேஸில் வெற்றி பெற்றதற்கும் அவருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டதற்கும் விஜய் வாழ்த்து தெரிவித்தார் எனக் கூறியுள்ளார்.

காரணம்: இது தொடர்பாக அந்தணன் பேசும்போது இவ்வாறு நடந்ததா என்றால், அது தெரியவில்லை. ஆனால் அப்படி இஎருவரும் மாறி மாறி வாழ்த்துகளைக் கூறிக்கொண்டார்கள் என்றால், அதனை சம்பவங்கள் நடைபெற்ற போதே கூறவேண்டியதுதானே, அதனை ஏன் இப்போது கூறுகின்றார்கள்? அதற்கான காரணம் என்ன? விடாமுயற்சி படத்திற்கு எதிராக விஜய் ரசிகர்கள் இணையத்தில் கருத்துக்களை பரப்பிவிடக் கூடாது என்பதுதான்.

விஜய் ரசிகர்களின் ஆதரவு இருந்தால் படத்தின் வசூல் இன்னும் கூடுதலாக இருக்கும். அதனை மனதில் வைத்துதான், அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா பேட்டி கொடுத்துள்ளார் எனக் கூறியுள்ளார். இவரது இந்தக் கருத்து பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.



Click it and Unblock the Notifications











