குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி... அண்ணாத்த படத்தின் என்னுயிரே லிரிக் வீடியோ வெளியீடு!

சென்னை : சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படம் தீபாவளியையொட்டி திரையரங்குகளில் வெளியானது.

Recommended Video

Annaatthe Review | Annatha Review by Poster Pakiri | Superstar Rajinikanth | Siva | Filmibeat Tamil

இந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சிறப்பான ஓபனிங்கை படம் பெற்றுள்ளது.

இந்நிலையில் படத்தின் என்னுயிரே பாடலின் லிரிக் வீடியோவை சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அண்ணாத்த படம்

அண்ணாத்த படம்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படம் தீபாவளியையொட்டி இரு தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். பழைய படங்களின் சாயல் படத்தில் காணப்படுவதாக விமர்சனங்கள் எழுந்தாலும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

ரசிகர்கள் குதூகலம்

ரசிகர்கள் குதூகலம்

அண்ணாத்த படத்தில் குஷ்பூ, மீனா உள்ளிட்டவர்களையும் சிறப்பாக பயன்படுத்தியுள்ளார் சிவா. ரஜினியின் பழைய நாயகிகளான அவர்களை ரஜினியுடன் இணைத்து பார்ப்பது ரசிகர்களிடையே குதூகலத்தை ஏற்படுத்தியுள்ளது. நாயகியாக நயன்தாராவும், தங்கையாக கீர்த்தி சுரேஷும் நடித்துள்ளனர்.

அண்ணன் -தங்கை பாசம்

அண்ணன் -தங்கை பாசம்

அண்ணன் -தங்கை பாசத்தை மையமாக கொண்டு படம் வெளியாகியுள்ளது. தன்னுடைய அண்ணனின் நியாபகம் வந்துவிட்டதாக படத்தை பார்த்த பெண்கள் கூறுவதை பார்க்க முடிந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு ரஜினியின் கமர்ஷியல் அவதாரத்தை படத்தில் பார்க்க முடிந்தது.

சிறப்பான கீர்த்தி சுரேஷ் நடிப்பு

சிறப்பான கீர்த்தி சுரேஷ் நடிப்பு

குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளிலும் பழைய ரஜினியை பார்க்க முடிந்ததாக தலைவர் ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர். கீர்த்தி சுரேஷின் நடிப்பு படத்தில் முக்கியமாக குறிப்பிட்டு கூறும்படி அமைந்துள்ளது. அண்ணனின் பாசத்தையும் விட்டுக் கொடுக்க முடியாமல், சூழ்நிலை அவருக்கு கொடுக்கும் நெருக்கடிகளையும் சமாளித்து சிறப்பான நடிப்பை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

லிரிக் வீடியோ வெளியீடு

ரஜினி -கீர்த்தி சுரேஷ் இடையிலான பாசம் படம் நெடுகிலும் சிறப்பாக கூறப்பட்டுள்ளது. பாடல்களிலும் இது வெளிப்பட்டுள்ளது. குறிப்பாக என்னுயிரே பாடலில் அண்ணன் -தங்கை பாசம் சிறப்பாக வெளிப்பட்டுள்ளது. இந்நிரைலயில் இந்தப் பாடலின் லிரிக் வீடியோவை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.

ரசிகர்கள் உற்சாகம்

ரசிகர்கள் உற்சாகம்

ரசிகர்கள் திரையரங்குகளில் சூப்பர்ஸ்டாரின் படத்தை கொண்டாடிவரும் நிலையில், இந்தப் பாடல் வெளியாகியுள்ளது அவர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை கொடுத்துள்ளது. இந்தப் பாடலின் காட்சிகளை சிவா சிறப்பான வகையில் படமாக்கியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X