வெளியான சில மணிநேரங்களில் 10 லட்சம் வியூஸ்... பட்டையை கிளப்பிய சாரக் காற்றே பாடல்!

சென்னை : சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வருகிறது அண்ணாத்த படம்.

Recommended Video

யார் இந்த Kulappulli Leela | Rewind Raja | Filmibeat Tamil

இமான் இசையமைப்பில் இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் நேற்று மாலை வெளியிடப்பட்ட சாரக் காற்றே வீடியோ பாடல் சில மணிநேரங்களிலேயே 10 மில்லியன் வியூக்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

அண்ணாத்த படம்

அண்ணாத்த படம்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, மீனா, சூரி, சதீஷ், சத்யன், ஜெகபதிபாபு என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள படம் அண்ணாத்த. தீபாவளியையொட்டி திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது.

சிறுத்தை சிவா இயக்கம்

சிறுத்தை சிவா இயக்கம்

படத்தை இயக்கியுள்ளார் சிறுத்தை சிவா. இந்தப் படம் கமர்ஷியல் அம்சங்களை கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. பஞ்ச் டயலாக்குகளுக்கும் படத்தில் பஞ்சமில்லாமல் இருந்தது. இத்தகைய படங்களையே ரசிகர்கள் ரஜினியிடமிருந்து எதிர்பார்க்கிறார்களோ என்ற நினைப்பை இந்தப் படம் ஏற்படுத்தியுள்ளது.

அண்ணன் -தங்கை பாசம்

அண்ணன் -தங்கை பாசம்

அண்ணன் -தங்கை பாசத்தை மையமாக கொண்டு படம் உருவாகியுள்ளது. படத்தில் ரஜினிகாந்த், கீர்த்தி சுரேஷ் இடையிலான பாசப்பிணைப்பு மிக அழகாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. படத்தில் சென்டிமெண்ட் தூக்கலாக இருந்தாலும் அது மிகவும் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளது.

நாயகி நயன்தாரா

நாயகி நயன்தாரா

படத்தில் ரஜினிக்கு நாயகியாக நடித்துள்ளார் நயன்தாரா. இவரது காட்சியமைப்புகளும் குஷ்பூ, மீனா வரும் காட்சிகளும் ரசிக்கும்படியாக அமைந்துள்ளது. படத்தில் இமான் இசையமைப்பில் பாடல்கள் அனைத்தும் சிறப்பாக அமைந்துள்ளது. அண்ணாத்த பாடல் மிகுதியான வரவேற்பை பெற்றுள்ளது.

வீடியோ பாடல்கள் வெளியீடு

வீடியோ பாடல்கள் வெளியீடு

இதேபோல ரஜினி மற்றும் நயன்தாரா இடையிலான சாரக் காற்றே பாடலும் ரசிகர்களின் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் படத்தின் ஒவ்வொரு வீடியோ பாடலாக வெளியிட்டு வருகிறது. அண்ணாத்த பாடல் சில தினங்களுக்கு முன்பு வெளியானது.

சாரக்காற்றே பாடல் வெளியீடு

சாரக்காற்றே பாடல் வெளியீடு

இதேபோல நேற்று மாலை சாரக்காற்றே பாடல் வெளியானது. இந்தப் பாடல் சிறப்பான மெலடி பாடலாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் பாடல் வெளியாகி சில மணிநேரங்களிலேயே 1 மில்லியன் வியூஸ்களை பெற்றுள்ளது. இதுகுறித்து இசையமைப்பாளர் இமான் தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X