twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மகா குரு உடலால் மறைந்தாலும் இசையால் வாழ்வார்.. பாலமுரளி கிருஷ்ணா உடலுக்கு கமல் நேரில் அஞ்சலி- வீடியோ

    |

    சென்னை: பாடகர், இசையமைப்பாளர், நடிகர் என பன்முகத் திறமை கொண்டவர் பிரபல கர்நாடக இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா (86), சென்னையில் நேற்று காலமானார். அவரது உடல் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. பாலமுரளி கிருஷ்ணாவின் மறைவுச் செய்தி குறித்து அறிந்த பிரபலங்கள், அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். அந்தவகையில் அவரிடம் இசை கற்றுக் கொண்ட நடிகர் கமல், பாடகர் ஜேசுதாஸ் உள்ளிட்டோரும் நேரில் தங்களது அஞ்சலியைத் தெரிவித்தனர். முன்னதாக தனது டிவிட்டர் பக்கத்தில் கமல், "இசையால் பல லட்சம் பேரை வசீகரித்த 'மகா குரு' முரளி கிருஷ்ணா உடலால் மறைந்தாலும் அவரது இசை இந்த உலகில் ஒலித்துகொண்டே இருக்கும்" என தனது குருவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Legendary Carnatic musician and singer Dr.Balamuralikrishna passed away and his death has left the entire music fraternity in a state of mourning. Tamil film industry doyens like singer Yesudoss and Kamal Haasan are his ardent admirers. Kamal considers Balamuralikrishna as Guru for teaching him Carnatic music.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X