பலே வெள்ளையத்தேவா... சசிகுமாருக்கு சங்கிலி முருகன் பாராட்டு - வீடியோ
சென்னை: புதுமுக இயக்குநர் சோலை பிரகாஷ் இயக்கத்தில் சசிகுமார், தான்யா, கோவை சரளா, சங்கிலி முருகன், ரோகினி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பலே வெள்ளையத் தேவா'. தர்புகா சிவா இசையமைத்துள்ள இந்தப் படத்தை சசிகுமார் தயாரித்துள்ளார்.
ஒரே கட்டமாக தேனியில் மொத்த படப்பிடிப்பையும் படக்குழு முடித்துள்ளது. டிசம்பர் 23-ம் தேதி வெளியீட்டுக்காக, இறுதிகட்ட பணிகளைத் துரிதப்படுத்தி வந்த படக்குழு அப்பணிகள் முடிந்தவுடன், தணிக்கைக்கு விண்ணப்பித்தது.
தணிக்கை அதிகாரிகள் எந்தொரு இடத்தையும் கட் செய்யச் சொல்லாமல் 'யு' சான்றிதழ் கொடுத்துள்ளார்கள். தணிக்கை பணிகள் முடிந்துள்ளதைத் தொடர்ந்து டிசம்பர் 23ஆம் தேதி வெளியீடு என்று அதிகாரபூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.
இதுதொடர்பான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் சசிகுமார், நடிகை தன்யா, கோவை சரளா, ரோகினி, சங்கிலி முருகன், இயக்குநர் சோலை பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டர். அப்போது நடிகர் சங்கிலி முருகன் பலே சசிகுமார் என புகழாரம் சூட்டினார்.


Click it and Unblock the Notifications











