Vijay: கோவை போன விஜய்க்கு பாதுகாப்பு இல்லை.. விளாசி விட்ட ப்ளூ சட்டை மாறன்.. என்ன ஆச்சு?

கோவை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான நடிகர் விஜய் இன்று அதாவது ஏப்ரல் 26ஆம் தேதி தனது கட்சியின் பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்க கோவைக்குச் சென்றுள்ளார். சென்னையில் இருந்து புறப்பட்டு கோவைக்குச் சென்ற விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவையில் விஜய் ரோடு -ஷோ சென்றார். அப்போது ஏற்பட்ட ஒரு சம்பவம் அவரது பாதுகாப்பு குறித்த கேள்விகள் எழ காரணமாக இருந்துள்ளது. இது தொடர்பாக ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் காட்டமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

நடிகர் விஜய் கடந்த 2024ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். அப்போது அவர் அறிவித்தது, தற்போது நடிக்க கமிட் ஆகி உள்ள படங்களில் மட்டும் நடித்து விட்டு, முழுக்க முழுக்க அரசியலில் களமிறங்க உள்ளதாக அறிவித்தார். இது அவர் அரசியலுக்கு வரவேண்டும் என நினைத்துக் கொண்டு இருந்தவர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. விஜய் மீது பல விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் தனது கடைசி படத்தில் நடிப்பது மட்டும் இல்லாமல், அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் இன்று அதாவது ஏப்ரல் 26 ஆம் தேதி கோவையில் தனது கட்சியின் பூத் கமிட்டி உறுப்பினர்களைச் சந்தித்து அவர்களுடன் கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்க விஜய் இன்று காலை சென்னையில் இருந்து புறப்பட்டு கோவைக்கு வந்தார். மொத்தம் இரண்டு நாட்கள், அதாவது இன்றும் நாளையும் நடக்கும் இந்த கலந்தாய்வுக் கூட்டத்தில், கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, கரூர், சேலம் மற்றும் நாமக்கல் என மொத்தம் 7 மாவட்டங்களைச் சேர்ந்த தவெக நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளார்கள்.

Blue Sattai Maran Slams TVK Vijay Fans Activities In Kovai Road Show

விஜய்: இந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்ள சென்னையில் இருந்து கோவைக்கு தனி விமானத்தில் வந்த விஜய்க்கு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், விமான நிலையத்தில் இருந்து குறிப்பிட்ட தூரத்திற்கு விஜய் ரோடு - ஷோ நடத்தினார். சாலையின் இரு புறங்களிலும் விஜய்யை பார்க்க காத்திருந்த அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்களை பார்த்து விஜய் சிரித்த முகத்துடன் கையசைத்துக் கொண்டு இருந்தார்.

ரசிகர்கள் அட்ராசிட்டி: இதுவரை எல்லாம் நன்றாகத்தான் நடந்து கொண்டு இருந்தது. விஜய் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர். அவரைப் பார்க்க கூடியிருந்த மக்கள் கூட்டத்தில் அவரது தீவிர ரசிகர்களும் இருந்தார்கள். விஜய் ரோடு - ஷோ நடத்தும் போது சில ரசிகர்கள் அவரது பிரச்சார வாகனத்தின் மீது ஏறினார்கள். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. தொண்டர்கள் இப்படி வாகனத்தின் மீது ஏறுவார்கள் என விஜய் எதிர்பார்க்காததால், முதலில் அவர் திணறிப் போனார். அதன் பின்னர் அவர்களை பத்திரமாக இறங்கச் சொன்னார்.

Blue Sattai Maran Slams TVK Vijay Fans Activities In Kovai Road Show

பாதுகாப்பு: இந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகள் பலரும் விஜய்க்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை. அதனால்தான் பிரச்சார வாகனத்தின் மீது அவரது ரசிகர்கள் ஏறி உள்ளார்கள் என விமர்சித்து வருகிறார்கள். இது மட்டும் இல்லாமல், ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் விஜய்யின் பிரச்சார வாகனத்தின் மீது ஏறிய ரசிகர்களைப் பார்த்து மிகவும் காட்டமாக விமர்சித்துள்ளார். அதாவது, " கோவையில் விஜய்யின் வாகனத்தில் ஏறி கொரளி வித்தை ‌காட்டிய ரசிகர்கள். உங்களுக்கு பயந்துதான்டா Y பாதுகாப்பு கேட்ருக்காரு. இன்னும் என்னவெல்லாம் செய்ய போறானுங்களோ" என பதிவிட்டுள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X