Vijayakanth: கேப்டன் என்ன சம்பாதிச்சு வெச்சிருக்காருனு பாருங்க.. கண்ணீரே வருது.. மிஸ் யூ கேப்டன்!

சென்னை: தமிழ் சினிமா குறித்து தெரிந்தவர்களுக்கும் தமிழ்நாடு அரசியல் களம் குறித்து தெரிந்தவர்களுக்கும் கேப்டன் விஜயகாந்த் குறித்து கட்டாயம் தெரிந்திருக்கும். காரணம் கேப்டன் ஏதோ பத்தோடு பதினொன்றாக இருக்கும் நடிகர் அல்ல. திரையில் மட்டும் இல்லாமல் நிஜத்திலும் புரட்சி செய்தவர் கேப்டன். கேப்டன் மறைந்து ஒரு ஆண்டுக்கு மேலாக ஆகியிருந்தாலும், அவரை அவரது ரசிகர்களும் தொண்டர்களும் ரொம்பவும் மிஸ் செய்து வருகிறார்கள். அதற்கு ஒரு சாட்சியமாக தான் ஒரு ரசிகர் கேப்டனை நினைத்து கண்ணீரோடு பாடல் பாடும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

கேப்டன் விஜயகாந்த் மற்ற நடிகர்களிடம் இருந்து தனித்து தெரிய காரணமே, அவரது முரட்டுத்தனமான அன்பும், மூர்க்கத்தனமான கோபமும் என்று கூட கூறலாம். முரட்டுத்தனமான அன்புக்கு சொந்தக்காரர் என இவரைக் கூற காரணம், இவருடன் பழகிய மற்றும் பணியாற்றியவர்கள் அவர் குறித்து கூறியது தான். அனைவரையும் சாப்பிட வைத்து அழகு பார்த்தவர். அது தனது ரசிகர்கள் தொடங்கி, படத்தில் நடிப்பவர்கள் என மட்டும் இல்லாமல், தனது அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் என யாருமே பசியோடு இருக்க கூடாது என மனதார சாப்பாடு போட்டு அவர்களை மிரட்டி மிரட்டியே சாப்பிட வைத்தவர்.

Captain Vijayakanth Fan Who Sing Captain Song With Tears Video Goes Trending

முரட்டுத்தனமான அன்பு: தனது படத்தின் ஷூட்டிங் நடக்கிறது என தகவல் கேட்டு ரசிகர்கள் அவரைப் பார்க்க வந்தால், அவர்களுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டது மட்டும் இல்லாமல், சாப்பாடு இருக்கு சாப்பிட்டுட்டு வீட்டுக்குப் போ என மிரட்டலாக கூறி அனுப்புவார். இவரது அன்பிற்காகவே இவரை அனைவருக்கும் பிடிக்கும். நடிகராக மட்டும் இல்லாமல் நல்ல மனிதராகவும் வென்று காட்டியவர் கேப்டன். அறிமுக நடிகர்கள் தொடங்கி, முன்னணி நடிகர்கள் வரை அனைவரையும் ஒரே அளவில் மரியாதையோடு நடத்தியவர். இதனாலும் அவருக்கு திரையுலகில் தனி மரியாதை உள்ளது. அந்த மரியாதை இப்போதும் உண்டு.

Captain Vijayakanth Fan Who Sing Captain Song With Tears Video Goes Trending

ரசிகர்கள்: கேப்டனின் மறைவுச் செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ரசிகர்கள் பலரும் தமிழ்நாட்டின் மூளை முடுக்குகளில் இருந்து கிளம்பி சென்னைக்குச் சென்று அவரது உடலுக்கு கண்ணீரைத் தாரை தாரையாக கொட்டி அஞ்சலி செலுத்தினர். அவரது மறைந்த தினத்தில் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை மொத்தமாக கேப்டனுக்கு அஞ்சலி செலுத்த திரண்ட மக்களால் ஸ்தம்பித்தது. கேப்டன் மறைந்துவிட்டார், அவரது பூத உடலும் நல்லடக்கம் செய்யப்பட்டு ஒரு ஆண்டுக்கு மேல் ஆகிறது. ஆனாலும் அவரது ரசிகர்கள் அதுவும் தீவிர ரசிகர்கள் கேப்டனை நினைத்து, கேப்டன் குறித்து பேசி, அவரது பாடல்களைப் பாடி, கேட்டு, அவரது படங்களைப் பார்த்து ஒவ்வொரு நாளையும் கழித்து வருகிறார்கள்.

Captain Vijayakanth Fan Who Sing Captain Song With Tears Video Goes Trending

கேப்டனின் சொத்து: இப்படியான நிலையில், திருவிழா ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்கெஸ்ட்ராவில் கேப்டன் விஜயகாந்த்தின் நடிப்பில் உருவான சின்னக் கவுண்டர் படத்தில் இடம் பெற்றுள்ள பாடலான 'அந்த வானத்தை போல மனம் படைத்த மன்னவனே' பாடல் பாடப்பட்டது. ஆர்கெஸ்ட்ராவைப் பார்க்க கூடியிருந்த மக்கள் மத்தியில் இருந்த கேப்டனின் தீவிர ரசிகர் ஒருவர் கண்ணீரோடு அந்த பாடலைப் பாடினார். அவர் கேப்டனை நினைத்து மனமுருகி பாடியது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும், இந்த வீடியோவைப் பார்த்த பலரும் வீடியோவைப் பார்த்தாலே கண் கலங்குகிறது. இதுபோல தமிழ்நாடு முழுவதும் பல லட்சக்கணக்கான ரசிகர்கள் அவரை மிஸ் செய்து கொண்டு உள்ளார்கள். கேப்டன் சம்பாதிச்சு வெச்ச சொத்து இதுதான் என பேசி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X