அட்ஜெஸ்ட்மெண்டா? தப்பு தப்பா பேசுறாங்க.. லப்பர் பந்து பட நடிகை மீது வழக்குப்பதிவு!

சென்னை: அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியாகி நல்ல வசூலை அள்ளிய லப்பர் பந்து திரைப்படத்தில் நடித்தவர் தான் நடிகை சுவாசிகா. அந்த படத்தில் இயல்பாக நடித்து அனைவர் மனதிலும் இடம் பிடித்த இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மலையாள சினிமாவைச் சேர்ந்த நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற பெண் நீதிபதி ஹேமா தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. இந்தக் கமிட்டியில் பழம்பெரும் நடிகை சாரதா மற்றும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வல்சலா ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர்.

lubber pandhu swasika

நடிகை சுவாசிகா: இந்த அறிக்கை வெளியானதற்கு பின் பல நடிகைகள் தங்களுக்கும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளானதாக கூறி வருகின்றனர். அந்த வகையில் சில திரை பிரபலங்களுக்கு எதிராக நடிகை ஒருவர் புகாரளித்து இருந்தார். இது குறித்து, சுவாசிகா சமீபத்தில் ஒரு யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், புகார் அளித்த நடிகையை பற்றிய சர்ச்சை கருத்துகளை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

lubber pandhu swasika

வழக்குப்பதிவு: இதைத் தொடர்ந்து, ஹேமா கமிஷனில் அந்த நடிகை புகார் அளித்ததை தொடர்ந்து, சுவாசிகா, பீனா ஆண்டணி மற்றும் நடிகர் மனோஜ் ஆகியோர் மீது நெடும்பாசேரி காவல் துறையில் புகார் கொடுத்துள்ளார். இதனடிப்படையில் அவர்கள் மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தற்போது சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

lubber pandhu swasika

லப்பர் பந்து நடிகை: நடிகை சுவாசிகா லப்பர் பந்து திரைப்படத்தில் அட்டக்கத்தி தினேஷூக்கு மனைவியாக நடித்திருந்தார். இந்த படம் தான் இவருக்கு முதல் படம் என அனைவரும் நினைத்து இருந்தனர். ஆனால், இவர் 2009ல் வெளியான வைகை படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். பின்பு கோரிப்பாளையம், சாட்டை, அப்புச்சி கிராமம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

lubber pandhu swasika

காதல் திருமணம்: தமிழில் நடிகை சுவாசிகாவிற்கு பெரிய அளவில் பிரேக் கிடைக்காததால் மலையாள திரையுலகம் சென்று விட்டார். இப்போது மீண்டும் 'லப்பர் பந்து' படத்தின் மூலம் தமிழில் முதல் வெற்றியை ருசித்து இருக்கிறார். இவர் கடந்த ஜனவரி மாதம் பிரேம் ஜேக்கப் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருவரும் சீரியல் ஒன்றில் இணைந்து பணியாற்றியபோது காதலித்து பின்னர் திருமணம் செய்து கொண்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X