ஜிவி பிரகாஷின் பேச்சுலர் "அடியே" வீடியோ பாடல் வெளியானது!
சென்னை: இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் பேச்சுலர் அறிமுக இயக்குனர் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக திவ்யபாரதி நடித்து அறிமுகமானார். முனீஸ்காந்த், பகவதி பெருமாள் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
ரொமான்டிக் காட்சிகளுடன் திரைப்படத்தில் இடம்பெற்ற அடியே பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற சூழலில் இப்பொழுது அடியே வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது

நடிப்பிலும் பல வித்தியாசங்களை
தனது ஒவ்வொரு படத்திற்கும் இசையை வித்தியாசமாக கொடுத்து இப்பொழுது வெற்றிகரமான நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கும் ஜிவி பிரகாஷ்குமார் நடிப்பிலும் பல வித்தியாசங்களை காட்டி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் வெளியான பேச்சுலர் திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ்குமாரின் மிகச்சிறந்த நடிப்பு பாராட்டுகளை பெற்றது .

எல்லை மீறிய காதலர்கள்
அறிமுக இயக்குனர் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் உருவான பேச்சுலர் முழுக்க முழுக்க காதலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்போதுள்ள இளம் காதலர்களை பற்றி மிக தத்ரூபமாக எடுத்துள்ள பேச்சுலர் அனைத்து தரப்பு மக்களாலும் பாராட்டப்படுகிறது. கிராமத்திலிருந்து நகரத்திற்கு வரும் இளைஞர்கள் காதல் வயப்பட்டு பின் எல்லை மீறி நடந்து கொள்வதால் கடைசியில் ஏற்படும் விபரீதத்தை பற்றிய இப்படம் மிகத் தெளிவாகக் கூறியுள்ளது. ஜிவி பிரகாஷின் முந்தைய படங்களை விடவும் பேச்சுலர் திரைப்படத்தில் மெச்சூரிட்டியான ஆக்டிங்கை வெளிப்படுத்தியுள்ளார்

லிவிங் டுகெதர் கலாச்சாரத்தை
காதல் காமெடி சென்டிமென்ட் என அனைத்தும் அமைந்துள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனர் சதீஷ் செல்வகுமார் இயக்கியுள்ளார். அறிமுக இயக்குனர் என்ற எந்த ஒரு சாயலும் இல்லாமல் இப்படத்தை மிக நேர்த்தியாக ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார். லிவிங் டுகெதர் என்ற புதிய கலாச்சாரத்தை பின்பற்றும் இளம் காதலர்களுக்கு இந்தப்படம் ஏற்றதாக உள்ளது.
மாடலிங் துறையில் கலக்கிக் கொண்டிருந்த திவ்யபாரதி இந்த படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் திவ்யபாரதி ரொமான்டிக் காட்சிகளில் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர்.

அடியே வீடியோ பாடல்
மரகதநாணயம்,கனா, கொம்பு வச்ச சிங்கம்டா உள்ளிட்ட படங்களுக்கு இசை அமைத்த திபு நினன் தாமஸ் இப்படத்திற்கும் இசை அமைத்துள்ளார் . இப்படத்தில் இடம்பெறும் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. குறிப்பாக இதில் ரொமான்டிக் பாடலான அடியே பாடல் அனைவரையும் கவர்ந்து மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டியது. இந்த நிலையில் அடியே வீடியோ பாடலை தற்பொழுது படக்குழு வெளியிட்டுள்ளது. காதல் ததும்ப உருவாகியுள்ள அடியே பாடல் இப்பொழுது ரசிகர்களை கவர்ந்து உள்ளது.


Click it and Unblock the Notifications











