அந்த மாதிரி கேரக்டரில் நடித்த கோலிவுட் நடிகைகள்.. அட இவங்ககூட லிஸ்ட்ல இருக்காங்களே

சென்னை: விபசாரியாக நடித்த கோலிவுட் நடிகைகளின் லிஸ்ட்டை இதில் பார்க்கலாம்.

சினிமாவில் வென்றுவிட்டால் அந்த சினிமா வெகு விரைவிலேயே பிரபலமாக்கிவிடும். பிறகு பிரபலமானவர் பின்னாடி ஒரு ஊரே சுற்றும். அப்படி பிரபலமானவர்கள் இங்கு நிறைய. அதேபோல் சினிமாவில் விவகாரமாக நடித்தும் பிரபலமானவர்கள் பலர் இருக்கிறார்கள். குறிப்பாக ஒருபக்கம் நல்ல கேரக்டர்களில் நடித்துக்கொண்டிருக்கும் நடிகைகள் திடீரென வில்லங்கமான கேரக்டரிலும் நடிப்பார்கள். அது சினிமா உலகத்தில் பரபரப்பாக பேசப்படும். அப்படி விபசாரியாக நடித்த நடிகைகளின் லிஸ்ட்டை பார்க்கலாம்.

Here you can see the list of Kollywood actresses who played prostitutes

அனுஷ்கா: தமிழ் மட்டும் தெலுங்கில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் அனுஷ்கா. தனது அழகாலும் திறமையாலும் ரசிகர்களை பல வருடங்கள் கட்டிப்போட்டு வைத்திருந்தார். சிலர் தங்களது மார்க்கெட்டை இழந்த பிறகு அதை தக்க வைப்பதற்காக வில்லங்கமான கேரக்டரில் நடிப்பார்கள். ஆனால் அனுஷ்காவோ அப்படி இல்லை தன்னுடைய மார்க்கெட் உச்சத்தில் இருக்கும்போதே வானம் திரைப்படத்தில் விபசாரியாக நடித்திருந்தார். அவர் அந்தக் கதாபாத்திரத்தில் நடித்தபோது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

சங்கீதா: 90களில் கதாநாயகியாக அறிமுகமான சங்கீதாவுக்கு சொல்லிக்கொள்ளும்படி பெரிதாக எந்தப் படமும் அமையவில்லை. பாலா இயக்கத்தில் அவர் நடித்த பிதாமகன் படம் மட்டும் அவரது அடையாளமாகிப்போனது. சூழல் இப்படி இருக்க நடிகை சங்கீதா தனம் என்ற படத்தில் விபசாரியாக நடித்து கவர்ச்சியை கொஞ்சம் தூக்கலாகவே காண்பித்திருப்பார்.

அஞ்சலி: தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவர் அஞ்சலி. கற்றது தமிழ், எங்கேயும் எப்போதும் என அவர் தனது மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அவர் மலையாளத்தில் ரோசாப்பூ என்ற படத்தில் விபசாரியாக நடித்திருந்தார். அவர் அவ்வாறு நடித்திருந்தது சினிமா உலகில் பெரும் பரபரப்புடன் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சினேகா: புன்னகையரசி என்று அழைக்கப்பட்டவர் சினேகா. பார்ப்பதற்கு படு ஹோம்லியாக இருக்கும் அவர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான புதுப்பேட்டை படத்தில் விபசாரி கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார். அதனை அப்போது ரசிகர்கள் அட நம்ம புன்னகையரசியா இவங்க என அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். சினேகாவுக்கு புதுப்பேட்டை திரைப்படம் நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X