IPL: ஆர்.சி.பி ரசிகர்களுடன் சண்டைக்கு போன பிக் பாஸ் சௌந்தர்யாவின் வீடியோ.. முரட்டு ரசிகை போல!

சென்னை: ஐபிஎல் போட்டி தொடங்கிவிட்டாலே ரசிகர்கள் மனதில் கடந்த சில ஆண்டுகளாக இருக்கும் கேள்விகள்: சில இயல்பாகவே எழுந்து வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு இதுதான் கடைசி சீசனா என்ற கேள்வியும் இந்த ஆண்டாவது விராட் கோலியின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை வெல்லுமா என்ற கேள்விதான் அது. இப்படியான நிலையில் 18வது சீசன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சென்னை அணியும் பெங்களூரு அணியும் நேற்று அதாவது மார்ச் 28 ஆம் தேதி மோதிக் கொண்டது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் தனது சொந்த மண்ணில் தோல்வியைச் சந்தித்தது. போட்டிக்கு நடுவே, பிக்பாஸ் சௌந்தர்யா, பெங்களூரு அணியின் ரசிகருடன் சண்டை போடும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 16 ஆண்டுகளாக ஒரு சாதனையை தனது கைவசத்தில் வைத்திருந்தது. அதாவது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது சொந்த மைதானமான, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் கடந்த 16 ஆண்டுகளாக தோற்றதே இல்லை. கடைசியாக ஐபிஎல் தொடங்கிய ஆண்டான 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில்தான் சென்னை அணி தனது சொந்த மைதானத்தில் தோல்வியைச் சந்தித்தது. அதன் பின்னர் 16 ஆண்டுகளாக வெற்றி பெற்றுக் கொண்டு வந்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய தோல்வியைச் சந்தித்தது.

IPL 2025 CSK vs RCB Bigg Boss Soundarya Fight With RCB Fans Video Goes Trending

சௌந்தர்யா: இப்படியான நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தீவிர ரசிகர்களில் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 இன் ரன்னர்-அப் சௌந்தர்யாவும் ஒருவர். இவர் கடந்த போட்டியையும் சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு சென்று பார்த்தார். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்நிலையில் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியையும் மைதானத்திற்கு சென்று பார்த்துள்ளார்.

IPL 2025 CSK vs RCB Bigg Boss Soundarya Fight With RCB Fans Video Goes Trending

சண்டை வீடியோ: இவருடன் இவரது காதலர் விஷ்ணுவும் நண்பர்களும் இருந்துள்ளனர். இந்நிலையில் போட்டியில் சென்னை அணி பேட்டிங் செய்து கொண்டு இருந்தபோது, அவருக்கு அருகில் இருந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ரசிகருடன் சண்டையில் ஈடுபட்டுள்ளார். அதாவது இது வாக்குவாதம் இல்லை என்றாலும் பெங்களூரு அணியின் ரசிகர் ஆர்.சி.பி எனக் கத்தினால், சௌந்தர்யா சி.எஸ்.கே என்று கத்துகிறார். இது தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

IPL 2025 CSK vs RCB Bigg Boss Soundarya Fight With RCB Fans Video Goes Trending

ஷாலினி: போட்டியை பார்க்க பல பிரபலங்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வந்திருந்தார்கள். குறிப்பாக நடிகர் அஜித் குமாரின் மனைவியும் நடிகையுமான ஷாலினி தனது மகன் ஆத்விக்கை அழைத்துக் கொண்டு வந்திருந்தார். சென்னை அணி தோல்வி முகத்தில் இருந்ததை உணர்ந்த அவர் மைதானத்தில் மிகவும் அப்செட்டாக காணப்பட்டார். இது மைதானத்தில் உள்ள மிகப்பெரிய ஸ்க்ரீனில் காட்டப்பட்டது மேலும் தொலைக்காட்சிகளிலும் காட்டப்பட்டது. சென்னை அணி இதுவரை 2 போட்டிகளில் விளையாடி ஒன்றில் தோல்வியும், ஒன்றில் வெற்றியும் பெற்றுள்ளது. புள்ளிப்பட்டியலில் இப்போதைக்கு 7 வது இடத்தில் உள்ளது.

இந்த போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஹோம் கிரவுண்ட் ஆன, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. சொந்த மைதானத்தில் சென்னை அணி தோல்வியைத் தழுவியதை ரசிகர்கள் பலரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்து வீச முடிவெடுத்தது. எனவே யல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரர்களாக பிலிப் சால்ட் மற்றும் விராட் கோலி களமிறங்கி, சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். இருவரில் பிலிப் சால்ட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். விராட் கோலி, நிதானமாக ஆடிக் கொண்டு இருந்தார்.

விராட் கோலி: குறிப்பாக பத்திரனா வீசிய ஒரு ஓவரில் விராட் கோலி ஹெல்மெட்டில் அடிவாங்கினார். அதன் பின்னர் அதற்கு முன்னர் ஓவரில் தலைக்கு வந்த பந்தை வைய்டு கேட்க நினைத்த அவர், அதன் பின்னர் வேண்டாம் என முடிவெடுத்து சிரித்துக் கொண்டு கிரீஸ்க்குள் சென்றுவிட்டார். ஹெல்மெட்டில் பந்து பட்டபின்னர், விராட் கோலியிடம் பத்திரனா மன்னிப்பு கேட்டார். அதன் பின்னர் பத்திரான வீசிய இரண்டு பந்துகளை சிக்சருக்கும் பவுண்டரிக்கும் விரட்டி விரட்டி பதிலடி கொடுத்தார் கிங் கோலி. பெங்களூரு அணியின் பேட்டிங் சிறப்பாக இருந்தாலும் சென்னை அணி கிட்டத்தட்ட 5 கேட்களை மிஸ் செய்தது, கூடுதல் ரன்களைக் குவிக்க காரணமாக அமைந்தது. கடைசி ஓவரில் டிம் டேவிட் ஹாட்ரிக் சிக்சர்களை பறக்கவிட்டு அணியின் ஸ்கோர், 190 ரன்களைக் கடக்க காரணமானார்.

ஆர்.சி.பி: பெங்களூரு அணி சார்பில் கேப்டன் ரஜித் படிதார் அரைசதம் விளாசினார். மற்றவர்களும் பந்துகளை வீணாக்காமல், சிறப்பாக விளையாடினர். அதன் பின்னர் 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆரம்பம் முதலே அடிமேல் அடி விழுந்தது. சென்னை அணியின் டாப் ஆர்டர் பவர்ப்ளேவிற்குள் சரிந்தது. களமிறங்கிய முதல் ஐந்து வீரர்களில் ரச்சின் ரவிந்திராவைத் தவிர மீதி நான்கு பேரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். ஒரு கட்டத்தில் சென்னை அணி 80 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

தோனி: ரசிகர்கள் அனைவரும் தோனி கள்மிறங்க வேண்டும் என கத்திக் கொண்டு இருந்தார்கள். ஆனால் தோனி ஆட்டத்தின் 16வது ஓவரில்தான் களமிறங்கினார். தோனி ஏன் 13வது ஓவரில் களமிறங்கவில்லை என்ற கேள்வியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களே கேள்வியாகவும் அதிருப்தியாகவும் எழுப்பி வருகிறார்கள். 16வது ஓவரில் களமிறங்கிய தோனி, அதிரடியான ஆட்டத்தை வெளிபடுத்தவில்லை. கடைசி ஓவரில் மட்டும் இரண்டு சிக்சர்களை அடுத்தடுத்து பறக்கவிட்டார். இந்த சிக்சர்கள் அணியின் தோல்வி வித்தியாசத்தைக் குறைக்க மட்டுமே உதவியது. இறுதியில் பெங்களூரு அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.

மோசமான வரலாறு: பெங்களூரு அணி கடந்த 16 ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை அதன் சொந்த மைதானத்தில் வீழ்த்தியது கிடையாது. இதற்கு முன்னர், 2008ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் பெங்களூரு அணி சென்னை அணியை வீழ்த்தியுள்ளது. அதன் பின்னர் சென்னை அணியை அதன் சொந்த மைதானத்தில் பெங்களூரு அணி வீழ்த்தவே இல்லை. இந்த மோசமான வரலாறுக்கு பெங்களூரு அணி நேற்றைய போட்டியில் முற்றுப் புள்ளி வைத்துள்ளது, சென்னை சேப்பாக்கத்தில் தனது வெற்றிக் கணக்கை மீண்டும் தொடங்கியுள்ளது.

More from Filmibeat

Read more about: ipl csk bigg boss soundarya
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X