மனதை உறைய வைத்த “ஜெய்பீம்“…. உருவான மேக்கிங் வீடியோ !

சென்னை : சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது. இதில் படம் உருவாகிய விதம் குறித்து இயக்குனர் ஞானவேல் ராஜா விளக்கி உள்ளார்.

உண்மைக்கதையை அடிப்படையாக கொண்டு உருவான ஜெய் பீம் திரைப்படம், நேற்று அமேசான் பிரைமில் வெளியாகி அனைவரின் பாராட்டை பெற்றது.

இப்படத்தில் சூர்யா வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சூர்யாவின் 39பது படம்

சூர்யாவின் 39பது படம்

சூர்யாவின் 39வது திரைப்படமான ஜெய்பீம் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்தை கூட்டத்தில் ஒருவன் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கி உள்ளார். ரஜிதா விஜயன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். நடிகர் அருண் விஜய்யின் மகன் இப்படத்தின் முக்கிய கதாபாத்தில் நடிக்க உள்ளார்.

ஒரு உண்மை சம்பம்

ஒரு உண்மை சம்பம்

இது பழங்குடியினத் தம்பதியரான செங்கேணி மற்றும் ராஜகண்ணு வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவமாகும். ராஜகண்ணு போலீஸாரால் பொய் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு, காவல் நிலையத்தில் இருந்து காணாமல் போகிறார். அவரது மனைவியான செங்கேணி தன் கணவனைத் தேடித் தொடங்குகிறாள். உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு, 1993ம் ஆண்டு, ஒரு பழங்குடி இன பெண்ணுக்காக வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டே இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

சட்டப்போராட்டம்

சட்டப்போராட்டம்

பழங்குடிப் பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதியும் அதற்கு எதிரான சட்டப்போராட்டமும் தான் ஜெய்பீம். இருளர்களின் வாழ்க்கை குறித்த சில காட்சிகளும் இப்படத்தில் உள்ளன. இந்த படத்தை சூர்யா 2 டி நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளது. அமேசானில் வெளியாகி உள்ள இத்திரைப்படத்தை பலரும் பாராட்டி உள்ளனர்.

மேக்கிங் வீடியோ

மேக்கிங் வீடியோ

இந்நிலையில், ஜெய் பீம் திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி உள்ளது. அதில், இயக்குனர் ஞானவேல் படம் உருவாக்கிய விதம் குறித்து பேசினார். அப்படத்திற்காக உண்மையில் இருளர் மக்கள் வாழும் பகுதிக்கு சென்று படமாக்கப்பட்டது. கதை 1995ம் ஆண்டு காலகட்டத்தில் நடந்ததால், 30 வருடம் பின்நோக்கி சென்று அவர்கள் எந்தமாதிரியான உடைகளை பயன்படுத்தினார்கள், வீட்டில் எந்தமாதிரி பொருட்களை வைத்து இருந்தார்கள் என்பதை பார்த்து பார்த்து படம் எடுக்கப்பட்டதாக கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X