Keerthi Pandian: மேக்கப் போட்டு திருமண வரவேற்புக்கு கீர்த்தி பாண்டியன் எப்படி ரெடியாகுறாரு பாருங்க!

சென்னை: நடிகர் அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் திருமணம் கடந்த வாரம் நடைபெற்ற நிலையில், சமீபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. சினிமா பிரபலங்கள் பலரும் அந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழ் சினிமாவின் இளம் ஜோடிகளை வாழ்த்தினர்.

அந்த நிகழ்ச்சிக்காக கீர்த்தி பாண்டியன் மேக்கப் செய்துக் கொண்டு ரெடியான வீடியோ இன்ஸ்டாகிராமில் தீயாக பரவி வருகிறது.

Keerthi Pandian bridal makeup video trending in social media

அருண்பாண்டியன் மகள்: தமிழ் சினிமாவில் ஆக்‌ஷன் ஹீரோவாக அசத்தி வந்த அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் மலையாளத்தில் வெளியான ஹெலன் படத்தின் தமிழ் ரீமேக்கான அன்பிற்கினியாள் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். அந்த படத்துல அவரது அப்பா அருண்பாண்டியனும் வெகு நாட்களுக்கு பிறகு மகளுக்காக நடித்திருந்தார்.

அசோக் செல்வனுடன் திருமணம்: பா ரஞ்சித் தயாரிப்பில் உருவாகி வரும் ப்ளூ ஸ்டார் திரைப்படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக கீர்த்தி பாண்டியன் நடித்த வந்த நிலையில், இருவருக்கும் காதல் ஏற்பட உடனடியாக திருமணத்தையும் செய்து கொண்டனர்.

சமீபத்தில் திருநெல்வேலியில் பாரம்பரிய முறைப்படி அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியனின் திருமணம் நடைபெற்றது.

Keerthi Pandian bridal makeup video trending in social media

திருமண வரவேற்பு: திருநெல்வேலியில் நடந்த திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்ட நிலையில், சினிமா பிரபலங்களாக சென்னையில் பிரம்மாண்டமாக திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தி இருந்தனர். சிவகார்த்திகேயன், ஹரிஷ் கல்யாண், கவின் உள்ளிட்ட ஏராளமான சினிமா நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் என பலரும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Keerthi Pandian bridal makeup video trending in social media

மேக்கப் போடும் கீர்த்தி பாண்டியன்: நீலக்கலர் கோட் சூட்டில் அசோக் செல்வனும் அவருக்கு மேட்ச் ஆக ப்ளூ கலர் கவுன் அணிந்து தேவதை போல கீர்த்தி பாண்டியன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஜொலித்தார்.

ஓவராக மேக்கப் போட்டது போல தெரியக்கூடாது என்பதற்காக சாஃப்ட் நேச்சுரல் மேக்கப்பை கீர்த்தி பாண்டியன் போடும் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது. மேக்கப் போடுவதற்காக கீர்த்தி பாண்டியன் மற்றும் அசோக் செல்வன் அணிந்திருந்த உடையிலும் தமிழில் அவர்கள் பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X