Madharaasi Day 2 Public Review: மதராஸி 2வது நாள் மக்கள் விமர்சனம்.. வில்லனை கொண்டாடும் ரசிகர்கள்!
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான 'மதராஸி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. படம் பார்த்த ஒரு ரசிகர், "ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு நல்ல படத்துக்கு என் பையனுக்கு கூட்டிட்டு வந்திருக்கேன்" என்று சந்தோஷமாக கூறியது பலரையும் நெகிழ வைத்தது.
'மதராஸி’ படத்தில் சிவகார்த்திகேயனின் நடிப்பு வித்தியாசமாக இருந்ததாகவும், ரொம்ப புதுசா பார்த்த மாதிரி இருந்ததாகவும் ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். விமர்சனங்களை பார்க்காமல், புதிதாக படம் பார்க்க வந்ததாகவும், படம் பார்த்த பிறகு ரொம்ப திருப்தியாக இருந்ததாகவும் கூறியுள்ளனர்.

படத்தின் பாடல்கள், சண்டைக் காட்சிகள் என அனைத்தும் சிறப்பாக இருந்ததாக ரசிகர்கள் பாராட்டியுள்ளனர். குறிப்பாக, படத்தில் வில்லனின் கதாபாத்திரம் மிகவும் மிரட்டலாக இருந்ததாகவும், வித்யூத் ஜமாலை திரையில் பார்க்கும்போது விசில் பறந்ததாகவும் ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எஸ்.கே-வின் தீவிர ரசிகை என்று சொல்லிக்கொண்ட ஒருவர், அவரை நேரில் சந்திக்க வேண்டும் என்பதே தனது ஆசை என்று கூறினார். மேலும், எஸ்.கே ஒரு புது ஜானரில் நடித்திருப்பதாகவும், கதையை நன்றாக தேர்ந்தெடுத்துள்ளதாகவும் அவர் பாராட்டினார்.
சமீபத்தில் வந்த படங்களில், 'மதராஸி’ படத்தின் கதைக்களம் சிறப்பாக இருந்ததாகவும், தேவையற்ற காட்சிகள் எதுவும் இல்லாமல், படத்தின் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்ததாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக படத்தில் இடம்பெற்ற சண்டைக் காட்சிகள் குழந்தைகளை பார்க்க வைக்க முடியாத அளவுக்கு கொஞ்சம் பயங்கரமாக இருந்ததாகவும் அவர்கள் கூறினர்.
துப்பாக்கி படத்தில் வந்த சண்டைக் காட்சிகளை விட, இதில் வித்தியாசமாக இருந்ததாகவும், படத்தின் BGM நன்றாக இருந்ததாகவும் ரசிகர்கள் தெரிவித்தனர். மொத்தத்தில் 'மதராஸி’ திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் விதமாக உள்ளது என 2வது நாளான இன்று சனிக்கிழமை தியேட்டருக்கு படையெடுத்து பார்த்த மக்கள் பிலிமிபீட் தமிழ் யூடியூப் சேனலுக்கு அளித்த மக்கள் விமர்சனத்தில் கூறியுள்ளனர்.
ஏகப்பட்ட ரசிகர்களும் ரசிகைகளும் சிவகார்த்திகேயனை விட வில்லன் வித்யூத் ஜமாலின் அதிரடி ஆக்ஷன் மற்றும் ஸ்வாக் தான் தங்களை வெகுவாக கவர்ந்தது என்றும் எப்போதுமே ஹீரோவை விட வில்லன் கதாபாத்திரம் வெயிட்டாக இருந்தால் தான் படம் ஓடும் என்றூம் ஷபீர் கல்லரக்கல், பிஜு மேனன், ருக்மணி வசந்த் என அனைவரும் கலக்கியுள்ளனர் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











