மருதாணி செவப்பு செவப்பு... மேக்கிங் வீடியோ வெளியிட்ட சன் பிக்சர்ஸ்!

சென்னை : சூப்பர்ஸ்டார் நடிப்பில் உருவாகி தீபாவளியையொட்டி வெளியாகவுள்ள படம் அண்ணாத்த.

டைரக்டர் சிவா இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக சன் பிக்சர்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளனர்.

இந்தப் படத்தின் 3வது பாடல் நேற்றைய தினம் வெளியான நிலையில், பாடலின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

சூப்பர்ஸ்டார் ரஜினி

சூப்பர்ஸ்டார் ரஜினி

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், மீனா, குஷ்பூ, நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் அண்ணாத்த. சூப்பர்ஸ்டார் மீண்டும் இந்தப் படத்தில் கமர்சியலாக நடித்துள்ளார். தீபாவளியையொட்டி வரும் நவம்பர் 4ம் தேதி இந்தப் படம் உலகளவில் ரிலீசாக உள்ளது.

அண்ணாத்த படம்

அண்ணாத்த படம்

படத்தின் 3 பாடல்கள் இதுவரை வெளியிடப்பட்டுள்ளது,. முதல் பாடல் டைட்டில் பாடலாக எஸ்பிபி குரலிலும் இரண்டாவது பாடல் டூயட் பாடலாகவும் நேற்றைய தினம் வெளியிடப்பட்ட 3வது பாடல் திருமணத்திற்கு தயாராகும் கீர்த்தி சுரேஷிற்கு வாழ்த்து கூறுவது போலவும் அமைந்துள்ளது.

சிறப்பான டீசர்

சிறப்பான டீசர்

மேலும் படத்தின் டீசரும் வெளியிடப்பட்டு சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. டீசரின் காட்சிகளில் படத்தின் பிரம்மாண்டம் அப்பட்டமாக தெரிந்தது. இந்நிலையில் இம்மாத இறுதியில் படத்தின் ட்ரெயிலர் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் அதற்காக காத்திருக்கின்றனர்.

3வது பாடலின் மேக்கிங் வீடியோ

3வது பாடலின் மேக்கிங் வீடியோ

இந்நிலையில் நேற்றைய தினம் வெளியிடப்பட்ட மருதாணி செவப்பு செவப்பு பாடலின் மேக்கிங் வீடியோவை தற்போது தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இமான் இசையில் இந்தப் பாடல் மிகவும் அழகாகவும் திருவிழா கொண்டாட்டத்துடனும் படமாக்கப்பட்டுள்ளது.

வண்ணமயமான பாடல்

வண்ணமயமான பாடல்

பாடலில் சூப்பர்ஸ்டாருடன் இணைந்து மீனா மற்றும் குஷ்பூ சிறப்பான ஆட்டம் போட்டுள்ளனர். பார்க்கவே மிகவும் வண்ணமயமாக சிறப்பான பின்புலத்துடன் இந்தப் பாடல் காணப்படுகிறது. அமுதவன் பாடல் வரிகளை எழுதியுள்ள நிலையில், நாகாஸ், ஆண்டனி தாசன் மற்றும் வந்தனா உள்ளிட்டவர்கள் இணைந்து பாடலை பாடியுள்ளனர்.

Recommended Video

Actress Sivaranjani Interview | Vinodaya Sitham | Annaatthe | Filmibeat Tamil
தீபாவளிக் கொண்டாட்டம்

தீபாவளிக் கொண்டாட்டம்

சூப்பர்ஸ்டாரின் படத்தை திரையரங்குகளில் அதிலும் தீபாவளி கொண்டாட்டத்துடன் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் சன் பிக்சர்சும் தன்னுடைய பங்கிற்கு தினந்தோறும் படத்தின் அப்டேட்கள், பாடல்கள், டீசர் என சிறப்பான வகையில் கொடுத்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X