Vijay: விஜய் கைகளைப் பிடித்துக் கொண்டு அழுத மனோஜ் பாரதிராஜாவின் அம்மா.. ஆறுதல் சொன்ன விஜய்.. வீடியோ!
சென்னை: இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மறைவுச் செய்தி மொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி விட்டது. மனோஜின் மனைவி நந்தனா அவரது இரண்டு மகள்கள், தந்தை பாரதிராஜா, அவரது அம்மா சந்திர லீலாவதி, சகோதரி ஜனனி என அனைவரையும் பெரும் சோகத்தில் மூழ்கடித்தது. திரையுலகத்தினர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.
இயக்குநர் பாரதிராஜாவுக்கு வயது 83 ஆகிறது. தமிழ் திரையுலகில் மிக மூத்த கலைஞராக பார்க்கப்படும் இவர், தனது வயது மூப்பிலும் நடித்து வருகிறார். அவரது வயது மூப்பை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கும் அவரது சிஷ்யர்களும் பலர் உள்ளார்கள். அப்படி இருக்கும்போது, அவரது மகனின் மறைவு பாரதிராஜாவை அவரது முதுமைக் காலத்தில் பெரும் சோகத்தை கொடுத்துள்ளது. இப்படியான நிலையில் பலரும் பாரதிராஜாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறி வருகிறார்கள்.
மனோஜ் பாரதிராஜாவின் உடல் நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. இது நடிகர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் வீட்டிற்கு அருகில் உள்ளது. இந்நிலையில் நடிகர் விஜய் நேற்று, தனது வீட்டில் இருந்து கையில் மாலையுடன் நடந்து, மனோஜ் பாரதிராஜாவின் வீட்டிற்குச் சென்றார். அங்கு சென்ற அவர் மனோஜ் பாரதிராஜாவின் உடலுக்கு மாலை அணிவித்து தனது இறுதி மரியாதை செலுத்தினார். அப்போது விஜய் கண்கள் கலங்கிய நிலையில் காணப்பட்டார்.

மனோஜ் தாயார்: மறந்த மனோஜ் பாரதிராஜா அவரது சிறு வயது நண்பர் என்பதால், விஜய் மிகவும் மனம் உடைந்து போயுள்ளார். மனோஜ் உடலுக்கு தனது இறுதி மரியாதை செலுத்திய பின்னர், மனோஜின் தாயாரான சந்திர லீலாவதிக்கு ஆறுதல் கூறினார். விஜய்யை பார்த்ததும், விஜய்யின் கைகளைப் பிடித்துக் கொண்ட மனோஜ் பாரதிராஜாவின் தயார், தேம்பித் தேம்பி அழுதார். உடனே விஜய் அவருக்கு ஆறுதல் கூறினார். ஆனாலும் மகனை இழந்த தாய் தனது வலியையும் மனக் குமுறலையும் சொல்லிச் சொல்லி அழுதார். இந்த காட்சிகள் அனைவரையும் கலங்க வைத்தது. இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

பாரதிராஜா: மனோஜ் பாரதிராஜாவின் அம்மாவுக்கு ஆறுதல் கூறிய பின்னர், பாரதிராஜாவைச் சந்தித்த விஜய், அவருக்கு ஆறுதல் கூறினார். ஆனால் பாரதிராஜா ஏற்கனவே மனதளவில் சோர்ந்து காணப்பட்டதால், அவரைத் தேற்றவும் முயற்சி செய்தார். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
இறுதிச் சடங்கு: மனோஜ் பாரதிராஜா மறைவுக்கு நடிகர் சூர்யா தனது தந்தை சிவகுமாருடன் வந்து இறுதி மரியாதை செலுத்தினார். தமிழ்நாடு முதலமைச்சர், துணை முதலமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர் உள்ளிட்ட பலரும் ஆறுதல் தெரிவித்தார்கள். மனோஜ் பாரதிராஜாவின் உடல் பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் எரிக்கப்பட்டது. அவரது உடலுக்கு இறுதிச் சடங்குகளை அவரது மகள்களே சேர்ந்து செய்தார்கள். இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் உலா வருகிறது. மகள்கள் இருவரும் தேம்பித் தேம்பி அழுதுகொண்டே மனோஜ்க்கு இறுதிச் சடங்குகளை செய்தனர். இறுதிச் சடங்குகள் முடிந்த பின்னர் பாரதிராஜாவை அவரது சிஷ்யர்கள் காரில் அமரவைத்தனர். அவர்களிடத்தில் தனது மகனை கடைசியாக பார்க்க விடவில்லை என கதறி அழுதார்.


Click it and Unblock the Notifications











