அண்ணாத்த படத்தின் கலக்கல் மருதாணி பாடல்... சில மணிநேரங்களில் 10 லட்சம் வியூஸ்
சென்னை : சூப்பர்ஸ்டார் ரஜினியின் நடிப்பில் தீபாவளி ரிலீசாக வெளியானது அண்ணாத்த படம்.
ரிலீசாகி 10 நாட்களை தாண்டியும் படத்தின் மீதான ஈர்ப்பு ரசிகர்களிடையே குறையவில்லை. வார நாட்களிலும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஒடி வருகிறது.
இந்தப் படத்தின் கலர்புல்லான மருதாணி சிவப்பு வீடியோ பாடல் நேற்று மாலை வெளியிடப்பட்டுள்ளது.

அண்ணாத்த படம்
சூப்பர்ஸ்டாரின் அண்ணாத்த படம் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி கடந்த 4ம் தேதி தீபாவளியையொட்டி ரிலீசானது. தலைவரை பழைய எனர்ஜியுடன் திரையரங்குகளில் காண ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக இந்தப் படத்திறகாக படையெடுத்து வருகின்றனர்.

சிறப்பான வரவேற்பு
தீபாவளியையொட்டி காணப்பட்ட விடுமுறையிலும் தொடர்ந்து வார நாட்களிலும் மக்கள் குடும்பம் குடும்பமாக இந்தப் படத்தை திரையரங்குகளில் சென்று கண்டு களித்து வருகின்றனர். ஒரே வாரத்தில் 200 கோடி ரூபாயை வசூலித்து 200 கோடி க்ளப்பில் இந்தப் படம் இணைந்துள்ளது.

சிறுத்தை சிவா இயக்கம்
படத்தில் சிறுத்தை சிவா சூப்பர்ஸ்டாரை இயல்பாகவும் கிராமத்து கெட்டப்பிலும் ரசிகர்கள் ரசிக்கும் வகையில் சிறப்பாக காட்டியுள்ளார். வயதானாலும் அவரின் அழகும் ஸ்டைலும் குறையவில்லை என்பதை நிரூபித்துள்ளார். படத்தில் அண்ணன் -தங்கை பாசத்தை மையமாக கொண்டு திரைக்கதையை அமைத்து பாராட்டுக்களை குவித்துள்ளார்.

சிவாவிற்கு ரஜினி பாராட்டு
நேற்றைய தினம் ஹுட் ஆப்பில் பேசிய ரஜினிகாந்த், சிவாவின் விஸ்வாசம் படத்தை பார்த்து தான் மிகுந்த உற்சாகம் கொண்டதாகவும், அதே வகையில் அண்ணாத்த படத்தையும் சிறப்பாக சிவா இயக்கியுள்ளதாகவும் சொல்லி அடித்துள்ளதாகவும் பாராட்டு தெரிவித்திருந்தார்.

வீடியோ பாடல்கள் வெளியீடு
இந்தப் படத்தின் பாடல்கள் ரிலீசுக்கு முன்னதாக லிரிக் வீடியோ பாடல்களாக வெளியாகி வரவேற்பை பெற்றன. இந்நிலையில் படத்தின் ரிலீசுக்கு பின்பு தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தற்போது படத்தின் வீடியோ பாடல்களை அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறது.
மருதாணி பாடல் வெளியீடு
முன்னதாக அண்ணாத்த, சாரக்காற்றே போன்ற பாடல்களை வெளியிட்ட சன் பிக்சர்ஸ் தற்போது மருதாணி சிவப்பு பாடலை நேற்று மாலை வெளியிட்டது. இந்தப் பாடலும் வெளியான சில மணி நேரங்களிலேயே 10 லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது. தன்னுடைய தங்கைக்கு திருமணத்தை மிகவும் உற்சாகமாக நடத்தும் காளையனின் மகிழ்ச்சி இந்தப் பாடலில் காணப்படுகிறது. மிகவும் கலர்புல்லாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications











