சமந்தா - நாக சைதன்யா விவாகரத்துக்கான காரணம்.. இதுதான்... இன்றைய டாப் 5 பீட்ஸில்!

சென்னை: சமந்தா நாக சைதன்யா விவாகரத்துக்கான காரணம் குறித்து பரவி வரும் தகவலை வீடியோவாக வழங்கியுள்ளார் பிகே.

Reason behind Samantha and Naga Chaytanya divorce?

தமிழ் சினிமா மட்டுமின்றி பாலிவுட் டோலிவுட் என பல்வேறு சினிமாக்கள் குறித்த சுவாரசியமான தகவல்கள் மற்றம் அப்டேட்டுகளை வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே.

மேலும் ஹாலிவுட் சினிமா தொடர்பான தகவல்களையும் வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே. அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில் பல்வேறு சுவாரசிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

Recommended Video

சமந்தா - நாக சைதன்யா விவாகரத்துக்கான காரணம்.. இதுதான்... இன்றைய டாப் 5 பீட்ஸில்!

அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில், வடிவேலு கதாப்பாத்திரத்தில் உருவாகும் காண்ட்ராக்டர் நேசமணி படம் குறித்த தகவலை கூறியுள்ளார். இந்தப் படத்தில் நடிகை ஓவியா நடிகர் யோகி பாபுவுக்கு ஜோடியாக நடிக்கிறார். நடிகர் வடிவேலு விஜய் சூர்யா நடிப்பில் வெளியான பிரண்ட்ஸ் படத்தில் காண்ட்ராக்டர் நேசமணி கதாப்பாத்திரத்தில் நடித்தார். அந்த கதாப்பாத்திரம் பெரும் ஃபேமஸானது குறிப்பிடத்தக்கது.

எஸ் ஜே சூர்யா சமீபகாலமாக வில்லன் கேரக்டரில் நடித்து வரும் தகவலை கூறியுள்ள பிகே எஸ் ஜே சூர்யா அடுத்ததாக வெப்சீரிஸில் நடிக்க உள்ளதையும் கூறியுள்ளார். எஸ் ஜே சூர்யா நடிக்கும் வெப் சீரிஸை, இயக்குநர் புஷ்கர் காயத்ரி இயக்கவுள்ளதாகவும் இதன் பட்ஜெட் 30 கோடி ரூபாய் என்றும் புரமோஷனுக்காக மட்டும் 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேபோல் நட்சத்திர தம்பதிகளான சமந்தா - நாக சைதன்யா விவாகரத்து அறிவித்துள்ள நிலையில் அதற்கு காரணம்
தி ஃபேமிலி மேன் டூ வெப் சீரிஸ் தான் என பரவி வரும் தகவல் குறித்தும் கூறியுள்ளார் பிகே. இதனால் தி ஃபேமிலி மேன் வெப் சீரிஸின் இயக்குநர் நடிகை சமந்தாவிடம் மன்னிப்பு கேட்பார் என்று தகவல் பரவி வருவது குறித்தும் கூறியுள்ளார்.

இதேபோல் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்தின் டீசர் குறித்து பேசியுள்ள பிகே, அஜித்தின் வேதாளம் படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுவதாகவும் அதில் சிரஞ்சீவி அஜித்தின் கதாப்பாத்திரத்தில் நடிப்பதாகவும் தமன்னா ஸ்ருதிஹாசன் கதாப்பாத்திரத்தில் ஒப்பந்தமாகியிருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் கேஜிஎஃப் இயக்குநரான பிராசாந்த் நீல் தனது அடுத்த படத்திலும் பிரபாஸை வைத்தே இயக்கப் போவதாக தெரிவித்துள்ளார். தற்போது பிரபாஸ் நடித்து வரும் சலார் படத்தை பிரசாந்த் நீல்தான் இயக்கி வருகிறார். இந்நிலையில் இந்த படத்தின் பணிகள் முடிந்ததும் அடுத்த படத்தின் பணிகள் தொடங்கும் என கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X