ஏய்.. பிஸிக்கல் வயலன்ஸ் வேணாம்னு பார்க்குறேன்.. முழு ரவுடியாக மாறிய ஷிவானி.. ஆத்தி.. என்னா சவுண்டு!

சென்னை: பிக்பாஸ் வீட்டில் இதுவரை அமைதியாக இருந்துவந்த ஷிவானி, அறந்தாங்கி நிஷாவிடம் மல்லுக்கட்டியதை பார்த்து அரண்டு போயுள்ளனர் ரசிகர்கள்.

Recommended Video

கொலுத்தி போட்ட பிக் பாஸ்! இந்த வாரம் வெளியேற போவது யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் ஹவுஸ்மெட்ஸ்களுக்கு லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் கொடுக்கப்பட்டது.

அதன்படி தொடர்ந்து 45 மணி நேரம் மணிக்கூண்டு டாஸ்க் நடைபெறுகிறது. நேற்று 3 டீம்கள் 3 மணி நேரத்தை கணித்தனர்.

தண்ணீர் பிடிக்கும் டாஸ்க்

தண்ணீர் பிடிக்கும் டாஸ்க்

பிக்பாஸ் வீட்டில் ஹவுஸ்மெட்டுகளே கடிகார முள்ளாய் இருப்பதால், எல்லாமே நேரப்படிதான் வழங்கப்படுகிறது. அந்த வகையில் நேற்று தண்ணீர் பிடிக்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டது.

மூக்கை நுழைத்த ஷிவானி

மூக்கை நுழைத்த ஷிவானி

அப்போது நிஷா அர்ச்சனா, அனிதா, சோம் என பல ஹவுஸ்மெட்ஸுடன் சண்டை போட்டார். எல்லோரையும் ஒண்டிக்கு ஒண்டியாக வெளுத்து விட்டார். அப்போது ஷிவானியும் சண்டையில் மூக்கை நுழைக்க அவரையும் வச்சு செய்தார்.

பிஸிக்கல் வயலன்ஸ்

பிஸிக்கல் வயலன்ஸ்

ஆனால் அதற்கு அசராத ஷிவானி, டீ ஷர்ட்டை இழுத்துவிட்டு ஏய் ஏய் என்னா என நிஷாவிடம் எகிறினார். மேலும் பிஸிக்கல் வயலன்ஸ் வேண்டாம் என்று பார்க்கிறேன் என ரவுடி போல் நடந்து கொண்டார்.

ஓடவிட்ட ஷிவானி

ஓடவிட்ட ஷிவானி

அதோடு நிஷாவின் வீக்னஸ் பாயிண்ட்டையும் தெரிந்துக் கொண்ட ஷிவானி, அவரது இடுப்பில் கை வைப்பதாக மிரட்டி ஓட விட்டார். அந்தக் காட்சியை பார்த்த ரசிகர்கள் ஷிவானியா இது என ஆச்சரியப்பட்டுவிட்டனர்.

முழு நேர டாஸ்க்

முழு நேர டாஸ்க்

எப்போதும், பாலாஜியின் பின்னால் சுற்றுவது, அவருக்கு ஊட்டிவிடுவது, மசாஜ் செய்து விடுவது, அவருடன் கடலை போடுவது என அவரை சுற்றுவதையே முழு நேர டாஸ்க்காக கொண்டிருந்தார் ஷிவானி.

இந்த பூனையும் பால் குடிக்குமா?

இந்த பூனையும் பால் குடிக்குமா?

இதனால் ஷிவானியை மிக்சர் திண்ணி என்றே அழைத்து வருகின்றனர் நெட்டிசன்கள் இந்நிலையில் நேற்றைய எபிசோடில் நிஷாவுடன் ஷிவானி மல்லுக்கட்டியதை பார்த்த நெட்டிசன்கள் இந்த பூனையும் பால் குடிக்குமா என கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X