தெகிடி படத்தின் பாடலை பாடிய ஷிவாங்கி... வைரலாகும் பாடல் வீடியோ!

சென்னை : நடிகர் அசோக் செல்வன், ஜனனி உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்திருந்த படம் தெகிடி.

இந்தப் படத்தில் விண்மீன் பாடல் சிறப்பான வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இந்தப் பாடலை குக் வித் கோமாளி புகழ் ஷிவாங்கி பாடியுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தெகிடி படம்

தெகிடி படம்

நடிகர் அசோக் செல்வன் மற்றும் ஜனனி உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து வெளியான படம் தெகிடி. கடந்த 2014ல் வெளியான இந்தப் படம் த்ரில்லர் படமாக வெளியானது. படத்தில் ஜெயப்பிரகாஷ், பிரதீப் நாயர் உள்ளிட்டவர்களும் நடித்திருந்தனர்.

திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பு

திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பு

அட்டக்கத்தி, பீட்சா, சூது கவ்வும் உள்ளிட்ட வெற்றிப் படங்களை தயாரித்திருந்த திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்திருந்தது. தனியார் டிடெக்டிவ் ஏஜென்சிக்காக சிலரது தகவல்களை திரட்டும் நாயகன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அசோக் செல்வன்.

சிறப்பான திரைக்கதை

சிறப்பான திரைக்கதை

சிறப்பான திரைக்கதையுடன் படமாக்கப்பட்ட இந்தப் படம் சிறப்பான வெற்றியையும் பெற்றது. படத்தில் அசோக செல்வன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். ஜனனி ஐயரும் சிறப்பாக நடித்திருந்தார். மற்ற அனைத்து கேரக்டர்களும் நல்ல முறையில் பயன்படுத்தப்பட்டிருந்தனர்.

பாடல்கள் வரவேற்பு

பாடல்கள் வரவேற்பு

இந்நிலையில் இந்தப் படத்தின் பாடல்களும் மிகுந்த வரவேற்பை பெற்றன. குறிப்பாக படத்தின் விண்மீன் பாடல் மெலடி நம்பராக அனைவரது கவனத்தையும் கவர்ந்தது. இந்தப் படத்தின் படத்தொகுப்பும் மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது. பாடலில் அசோக் செல்வன் அமைதியாகவும் ஜனனி தனது கண்களாலேயே மயக்கவும் செய்திருப்பார்கள்.

ஆல்டைம் பேவரைட்

இந்தப் பாடல் எப்போதுமே அனைத்து தரப்பினரின் பேவரைட்டாக உள்ளது. இந்தப் பாடலை அனுபவித்து பாடாத பாடகர்களே இருக்க முடியாது. இந்நிலையில் குக் வித் கோமாளி புகழ் ஷிவாங்கி இந்தப் பாடலை தற்போது பாடியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ஷிவாங்கி பாடல்

ஷிவாங்கி பாடல்

இந்த வீடியோவில் மிகவும் அழகாக அந்தப் பாடலை நம் கண்முன்னே நிறுத்துகிறார் ஷிவாங்கி. பாடலுக்காக அவர் காட்டும் எக்ஸ்பிரஷன்களும் மிகவும் அழகாக காணப்படுகிறது. இந்த வீடியோவை திங்க் மியூசிக் வெளியிட்டுள்ளது. இதனிடையே இந்தப் பாடல் லவ்லியாக உள்ளதாக படத்தின் நாயகன் அசோக் செல்வன் கமெண்ட் செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X