பிக்பாஸுக்காக கமல் மட்டுமில்ல.. இவங்களும் புரமோட் பண்றாங்க.. யாரெல்லாம்னு பாருங்க!
சென்னை: பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் புரமோஷன் பணிகளில் சில பிரபலங்களும் இறங்கியுள்ளனர்.
பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி நாளை தொடங்க உள்ளது. நாளை மாலை 6 மணிக்கு கிராண்ட் ஓபனிங்காக தொடங்க உள்ளது பிக்பாஸ்.
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியை காண ரசிகர்களும் ஆர்வமாக உள்ளனர். இப்போதே ரசிகர்களை பிக்பாஸ் ட்ராக்கு மாற்ற நாள்தோறும் ஒரு புரமோ வெளியிட்டு வருகிறது விஜய் டிவி.

புரமோஷன் பணிகள்
கமலை வைத்து டிஃபால்ட்டாக கடந்த சில நாட்களாக பிக்பாஸ் கவுன்டவுன் போல புரமோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இருந்த போதும் பிரபலங்கள் சிலரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை புரமோட் பண்ணும் பணிகளில் இறங்கியிருக்கிறார்கள்.
இன்னும் மூன்றே நாட்களில்.. #3DaysToGo for the #GrandLaunch of #BiggBossTamil Season 4!! - வரும் ஞாயிறு மாலை 6 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #VijayTelevision pic.twitter.com/Cn3ELasd6p
— Vijay Television (@vijaytelevision) October 1, 2020
அடையாளத்தை மாற்றியிருக்கிறது
அதாவது பிக்பாஸ் முதல் சீசனின் டைட்டில் வின்னரான ஆரவ் பிக்பாஸ் சீசன் 4க்காக புரமோஷன் செய்துள்ளார். இதுதொடர்பான அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், விஜய் டிவி பல பேரோட அடையாளத்தை மாற்றியிருக்கிறது. அதில் நானும் ஒருத்தன். 2017 பிக்பாஸ்க்கு அப்புறம் என் வாழ்க்கையே மாறிடுச்சு.

யாரோட வாழ்க்கை
வாங்க பார்க்கலாம்.. இந்த முறை யாரோட வாழ்க்கை மாறப்போகுதுன்னு.. என கூறியிருக்கிறார். பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்றார் ஆரவ். அதன் டைட்டில் வின்னரான ஆரவுக்கு அதன் பிறகு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்னும் இரண்டே நாட்களில்.. #2DaysToGo for the #GrandLaunch of #BiggBossTamil Season 4!! - வரும் ஞாயிறு மாலை 6 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #VijayTelevision pic.twitter.com/xDiydEKZiZ
— Vijay Television (@vijaytelevision) October 2, 2020
மிஸ் பண்ணிடாதீங்க
இதேபோல் பிக்பாஸ் சீசன் 2 டைட்டில் வின்னரான நடிகை ரித்விகாவும் பிக்பாஸ் சீசன் 4க்காக புரமோஷன் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் நாம எல்லாரும் ஆர்வமாக எதிர்பார்த்திருக்கும் பிக்பாஸ் சீசன் 4 வரும் ஞாயிற்றுக் கிழமை தொடங்க போகுது.. மிஸ் பண்ணிடாதீங்க.. என கூறியுள்ளார்.

வளைத்து வளைத்து
நடிகை ரித்விகா தமிழ் சினிமாவின் இளம் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். ரஜினிகாந்தின் கபாலி, மெட்ராஸ், குண்டு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் ரித்விகா. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள அவர் வளைத்து வளைத்து போட்டோ ஷுட் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











