அந்த மனசுக்கு தான் அவரு சூப்பர் ஸ்டார்.. ரசிகரின் வீட்டிற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த ரஜினிகாந்த்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் என்றால் அது இரண்டு படங்கள், ஒன்று கூலி, மற்றொன்று ஜெயிலர் 2. இதில் கூலி படத்தை லோகேஷ் கனகராஜும் ஜெயிலர் 2 படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இந்த இரண்டு படங்களுக்கும் அனிருத் இசையமைத்து வருகிறார். இதில் கூலி படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளது. இப்படியான நிலையில் எக்ஸ் பக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது.

Super Star Rajinikanth Surprise Visit To His Fan s House in Abroad Video Goes Trending

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்து இந்த ஆண்டுடன் மொத்தம் 50 ஆண்டுகள் ஆகிறது. இந்த ஆண்டில் இரண்டு படங்களை ரிலீஸ் செய்து ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்க நினைத்தார் சூப்பர் ஸ்டார். ஆனால் ஜெயிலர் 2 படத்தின் கதை தயாரிப்பிலும், கூலி படத்தின் படப்பிடிப்பு முடிவதிலும் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் இரண்டு படங்களில் ஒரு படம் வெளியாவது உறுதியாகத் தெரிகிறது. ஆனால் சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளுக்கு இன்னும் 8 மாதங்கள் முழுவதும் உள்ளது.

Super Star Rajinikanth Surprise Visit To His Fan s House in Abroad Video Goes Trending

கூலி: எனவே, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாளில் ஜெயிலர் 2 வெளியாக வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் நம்பிக்கையில் உள்ளார்கள். அதே நேரத்தில் கூலி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் போர்ஷன்கள் படம் ஆக்கப்பட்டுவிட்டது. படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாவதற்கான அனைத்து பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்த படத்தையும் ஜெயிலர் 2 படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரித்து வருகிறது. இப்படியான நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Super Star Rajinikanth Surprise Visit To His Fan s House in Abroad Video Goes Trending

சூப்பர் ஸ்டார்: அதாவது அந்த வீடியோவில் சூப்பர் ஸ்டார் வெளிநாட்டில் இருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. அங்கு காலையில் எழுந்து நடைப்பயிற்சி செய்து கொண்டு இருந்தபோது, தமிழ்நாட்டைச் சேர்ந்த, சூப்பர் ஸ்டாரின் ரசிகர் மற்றும் அவரது குடும்பத்தினர் பார்த்துள்ளார்கள். அவரைப் பார்த்து நலம் விசாரித்த ரசிகர் மற்றும் அவரது மனைவி, வீட்டில் குழந்தைகள் உள்ளார்கள், அவர்களை அழைத்து வருகிறேன், ஒரு நிமிடம் மட்டும் காத்திருக்க முடியுமா என கேட்கிறார்கள். அதற்கு அவரோ, நான் வீட்டுக்கே வருகிறேன், என வீட்டிற்கு வருகிறார். அவரை வரவேற்ற அந்த ரசிகர் மற்றும் அவரது குடும்பத்தினர், தொடர்ந்து நடியுங்கள் சார் என கோரிக்கை வைத்துள்ளனர்.


இன்ப அதிர்ச்சி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை காலையில் எழுந்து தூங்கி எழுந்ததும் பார்த்த ரசிகரின் குழந்தைகள் இன்ப அதிர்ச்சி அடைந்ததும் அந்த வீடியோவில் தெரிகிறது. அந்த ரசிகரின் வீட்டிற்குள் செல்லும் போது, சூப்பர் ஸ்டார் தான் அணிந்திருந்த காலணியை கழட்டி விட்டு செல்வதும் வீடியோவில் தெரிகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்போது என்ன முடிவு எடுத்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பார் என யாருக்குமே தெரியாது. அப்படியான சம்பவம்தான் தற்போது வேகமாக பரவி வரும் வீடியோவில் உள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்கள், இந்த மனசுக்கு தான் அவர் சூப்பர் ஸ்டார் என கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

Super Star Rajinikanth Surprise Visit To His Fan s House in Abroad Video Goes Trending

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமாவில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்னர், பேருந்தில் நடத்துனராக பணியாற்றிக் கொண்டு இருந்தார் என்பது பலருக்கும் தெரியும். அதே காலகட்டத்தில் நாடகங்களிலும் நடித்து வந்ததை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தே மேடை ஒன்றில் தெரிவித்தார். நாடகத்தில் இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சினிமாவிற்கும் முயற்சி செய்து, அதன் பின்னர் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.

ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது பள்ளிக் காலத்திலேயே தொழில் தொடங்க சென்னைக்கு வந்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அப்போது சிவாஜிராவ் கெய்க்வாட். 10வது படித்துக் கொண்டு இருந்த காலகட்டம். பள்ளியில் கல்விக் கட்டணம் செலுத்தச் சொல்லி அவரது அண்ணன், ரூபாய் 160 கொடுத்துள்ளார். ஆனால் சிவாஜி ராவ்க்கு படிப்பதில் ஆர்வமே இல்லை. மாறாக எதாவது தொழில் செய்வதில்தான் ஆர்வமே. எனவே பணத்தை பள்ளியில் கட்டுவது வீண் என முடிவெடுத்துள்ளார்.

படிப்பின் மீது அக்கறை இல்லாத, ரஜினிகாந்த், தனது அண்ணன் கொடுத்த ரூபாய் 160 பணத்தை வாங்கி வைத்துக் கொண்டு, இரவு உணவை தனது குடும்பத்தினருடன் அமர்ந்து சாப்பிட்டு முடித்துள்ளார். அதன் பின்னர் அனைவரும் தூங்கிய பின்னர், வீட்டில் இருந்து யாருக்கும் தெரியாமல் வெளியேறிவிட்டார். வந்தவர் நேராக பெங்களூரு ரயில்வே நிலையத்திற்கு வந்துள்ளார். ரஜினிகாந்த் வந்த நேரத்தில், சென்னை செல்வதற்கான ரயில் இருந்துள்ளது. சென்னைக்கு டிக்கெட் வாங்கிய ரஜினிகாந்த், ரயிலில் ஏறி அமர்ந்தும் கொண்டார்.

ரயில் சென்னை வந்ததும், கடவுளை வேண்டிக்கொண்டு சென்னையில் காலடி எடுத்துவைத்துள்ளார் ரஜினிகாந்த். அப்போது ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகர் பயணிகளின் டிக்கெட்டினை சரிபார்த்துக் கொண்டு இருந்தார். ரஜினிகாந்த் தனது டிக்கெட்டைத் தேடும்போதுதான் டிக்கெட் எங்கோ தொலைந்து விட்டது என்பது புரியவந்துள்ளது. டிக்கெட் பரிசோதகரிடம் சென்ற ரஜினிகாந்த், தான் எடுத்த டிக்கெட் தொலைந்து விட்டதாக கூறியுள்ளார். இதைக் கேட்ட டிக்கெட் பரிசோதகர், சிவாஜி ராவை, கொஞ்சம் ஓரமாக நிற்கச் சொல்லியுள்ளார்.

அவரும் நீண்ட நேரமாக ஓரமாகவே இருந்துள்ளார். இவர் நின்று கொண்டு இருந்ததைப் பார்த்த, சுமை தூக்கும் தொழிலாளர்கள், டிக்கெட் பரிசோதகரிடம் பேசி, ரஜினியை ரயில் நிலையத்தில் இருந்து வெளியேற உதவி செய்துள்ளனர். ரஜினி சென்னைக்கு வந்து இறங்கியதும் எதிர்கொண்ட முதல் அனுபவம் இதுதான் என்பது பலருக்கும் தெரியாது. ஆனால் சூப்பர் ஸ்டார் இன்றைக்கு தனது கடின உழைப்பாலும் முயற்சியாலும் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார் என்றாலும், வரும் ஜூன் மாதத்தில் இருந்து அவர் தனது சுயசரிதையை புத்தகமாக எழுத முடிவெடுத்துள்ளாராம். எனவே சுமார் மூன்று முதல் ஐந்து மாதங்கள் வரை படப்பிடிப்பில் சூப்பர் ஸ்டார் கலந்து கொள்ள மாட்டார் எனவும் கூறப்படுகிறது. மேலும் இந்த புத்தகத்தை தனது பிறந்த நாளில் வெளியிடவும் அவர் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மொத்தத்தில் சூப்பர் ஸ்டாரின் இந்த பிறந்த நாள் ரசிகர்களுக்கு பல சர்ப்ரைஸ் நிறைந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X