நானும் ‘இப்படி’ பணத்தை இழந்தவன் தான்... திட்டிவாசல் படவிழாவில் நாசர் உருக்கம்- வீடியோ
சென்னை: கே.3 சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் மு.பிரதாப் முரளி இயக்கியுள்ள படம் 'திட்டிவாசல்'. நாசர், மகேந்திரன், தனுஷெட்டி, அஜய்ரத்னம் நடித்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் நாசர், "இந்தப் படத்தின் கதை எனக்குப் பிடித்திருந்தது. பழங்குடியினர் பற்றிச் சமீபத்தில் படித்திருந்தேன். பூர்வகுடி மக்கள் சமகால அரசியல்வாதிகளாலும் பணமுதலைகளாலும் எப்படி ஒடுக்கப் படுகிறார்கள் என்கிற புரிதல் எனக்கு இருக்கிறது. இந்தக் கதை அதைச்சொல்ல வந்த போது பிடித்தது. நான் என்றும் சிறு முதலீட்டுப் படங்களுக்குத்தான் முன்னுரிமை கொடுப்பேன். இருந்தாலும், பல படங்கள் ஆரம்பித்து முடிக்க முடியாமல் நிற்பதைக் கேள்விப்படும் போது என்னால் அந்த வலியைத் தாங்க முடியாது. நானும் இப்படி பணத்தை இழந்தவன்தான்" என்றார்.
More from Filmibeat
thittivasal audio launch nassar mahendran oneindia tamil videos திட்டிவாசல் ஆடியோ ரிலீஸ் நாசர் மகேந்திரன்


Click it and Unblock the Notifications











