அஜித்தின் தங்கை கதாபாத்திரத்தில் சாய்பல்லவியா? கீர்த்தி சுரேஷா ? அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில்!
ஹைதராபாத் : தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படத் துறையில் முன்னணி நடிகைகளாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் நடிகை சாய் பல்லவி மற்றும் கீர்த்தி சுரேஷ்.
நடிகையர் திலகம் என்ற திரைப்படத்தின் மூலம் தேசிய விருது பெற்று பல்வேறு புகழுக்கு சொந்தக்காரரான கீர்த்தி சுரேஷ் இப்பொழுது ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
அதேபோல சாய்பல்லவியும் ரவுடி பேபியாக கலக்கி வரும் நிலையில் பிரபல இயக்குனர் அஜித்தின் தங்கை கதாபாத்திரத்திற்கு சாய்பல்லவி அல்லது கீர்த்தி சுரேஷை நடிக்க வைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.

வலிமை
வீரம், விவேகம், விஸ்வாசம், வேதாளம் என தொடர்ந்து இயக்குனர் சிவாவுடன் இணைந்து நடித்த அஜித் குமார் இப்பொழுது ஹெச் வினோத் உடன் இணைந்து வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார்

அஜித்தின் தங்கை
பிரபல ஹிந்தி திரைப்படமான பிங்க் திரைப்படத்தின் தமிழ் ரீமேக் ஆக உருவான நேர்கொண்ட பார்வை வெற்றியை தொடர்ந்து இந்த கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் வலிமை படத்தைப் பற்றிய தகவல்களை அறிய ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் இப்பொழுது அஜித்தின் தங்கை கதாபாத்திரத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ் அல்லது சாய்பல்லவியை நடிக்க வைக்க உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

பல மொழிகளில் ரீமேக்
சிறுத்தை சிவா அஜித் குமார் கூட்டணியில் உருவான வேதாளம் திரைப்படம் தமிழில் சக்கை போடு போட்டு வசூலை வாரி குவித்த நிலையில் இந்த திரைப்படம் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

நடிக்க வைக்க முயற்சி
இந்நிலையில் இந்த திரைப்படம் தற்போது தெலுங்கில் உருவாகும் நிலையில் இதில் அஜித் கதாபாத்திரத்தில் சிரஞ்சீவி நடிக்க, லக்ஷ்மி மேனன் கதாபாத்திரத்திற்கு அந்த படத்தின் இயக்குனர் மஹிர் ரமேஷ், கீர்த்தி சுரேஷ் அல்லது சாய் பல்லவியை நடிக்க வைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.

பாராட்டுகளைப் பெற்றது
கதாநாயகி வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த லட்சுமி மேனன் முதல் முறையாக தங்கை கதாபாத்திரத்தில் வேதாளம் திரைப்படத்தில் நடித்ததைத் தொடர்ந்து அதில் அவரது நடிப்பும் மிக பிரபலமாக பேசப்பட்டு பாராட்டுகளைப் பெற்றது.

இருவரிடமும் பேச்சுவார்த்தை
இந்நிலையில் தெலுங்கு ரீமேக்கில் உருவாகும் இந்த திரைப்படத்தில் சிரஞ்சீவிக்கு தங்கையாக நடிக்க கீர்த்தி சுரேஷ் அல்லது சாய் பல்லவி என இருவரிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பக்காவாக தயாராகி
மேலும் இந்த திரைப்படம் தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்றவாறு ஒருசில மாற்றங்கள் செய்து மற்றுமொரு பிளாக்பஸ்டர் திரைப் படமாக உருவாக இருக்கும் நிலையில் லாக் டவுனில் இயக்குனர் மஹிர் ரமேஷ் வேதாளம் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் திரைக்கதை முற்றிலும் முடித்து படப்பிடிப்பைத் தொடங்க பக்காவாக தயாராகி உள்ளார்.

யார் நடிக்க உள்ளார்
இவ்வாறு இந்த திரைப்படத்தில் சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்க தங்கை கதாபாத்திரத்திற்கு கீர்த்தி சுரேஷ், சாய் பல்லவி இவர்களில் யார் நடிக்க உள்ளார் என்பதை பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் மிக விரைவிலேயே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











