Vikram: விக்ரம் காரை ஹைவேயில் துரத்திய ரசிகர்கள்.. அட்வைஸ் கொடுத்து அனுப்பிய விக்ரம்.. செம வீடியோ!
சென்னை: விக்ரம் கதாநாயகனாக நடித்து தற்போது ரிலீஸ் ஆகியுள்ள படம் வீர தீர சூரன் பாகம் 2. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஓடி வருகிறது. அருண் குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் விக்ரம், எஸ்.ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். சித்தா படத்திற்கு பின்னர் அருண் குமார் இயக்கத்தில் வெளியான படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவல் ஏற்பட்டது.
இப்படியான நிலையில் படத்தின் புரோமோஷன் பணிகளுக்காக விக்ரம் காரில் சென்று கொண்டு இருந்தபோது, ரசிகர்கள் அவரது காரை பைக்கில் துரத்திப் பிடித்தனர். இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத விக்ரம், அவர்களுக்கு அட்வைஸ் கொடுத்து அனுப்பியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
தங்கலான் படத்திற்கு பின்னர் விக்ரம் நடிப்பில் வெளியாகும் படம் என்பதால் ரசிகர்கள் இந்த படத்தின் மீது பெரும் நம்பிக்கை வைத்துள்ளார்கள். இது மட்டும் இல்லாமல், படத்தின் இயக்குநரான அருண்குமார், விக்ரமின் தீவிரமான ரசிகர் என்பதால், படத்தில் ஃபேன் பாய் சம்பவம் கட்டாயம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக படத்தில் விக்ரமுக்கு பல மாஸான காட்சிகளை வைத்து மிரட்டி விட்டுள்ளார்.

வீர தீர சூரன்: இது மட்டும் இல்லாமல் விக்ரம், எஸ்.ஜே. சூர்யா மற்றும் சுராஜ் வெஞ்சரமூடு என மூவரும் போட்டி போட்டு நடித்துள்ளார்கள். அவர்களின் நடிப்புக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. படம் வெளியாவதற்கு முன்னர் விக்ரம் மற்றும் படக்குழுவினர் படத்தின் புரோமோஷன் பணிகளில் சிறப்பாக ஈடுபட்டனர். குறிப்பாக விக்ரம் அனைத்து விதமான புரோமோஷன் பணிகளிலும் ஈடுபட்டார். புரோமோஷன்களில் அவரது பேச்சு பலரது கவனத்தை ஈர்த்தது. மேலும் படம் ஒரு நாள் இரவில் நடக்கும் கதை எனக் கூறிவிட்டதால், ரசிகர்கள் படத்தை பார்க்க ஆவலோடு காத்துக் கொண்டு இருந்தனர். படம் திட்டமிட்டபடி 27ஆம் தேதி காலையில் ரிலீஸ் செய்ய முடியவில்லை என்றாலும், படக்குழு நடத்திய பல கட்ட போராட்டங்களுக்குப் பின்னர், முதல் காட்சி, 27ஆம் தேதி மாலையில் திரையிடப்பட்டது.

வீடியோ: இப்படி இருக்கும்போது, தற்போது இணையத்தில் ஒரு வீடியோ வேகமாக பரவி வருகிறது. அதாவது, நடிகர் விக்ரம் தனது காரில் படத்தின் புரோமோஷனுக்காக ஹைவேயில் வேகமாக சென்று கொண்டு உள்ளார். காரில் செல்வது விக்ரம்தான் என தெரிந்து கொண்ட ரசிகர்கள் இருவர், அவரது காரை விரட்டிப் பிடித்துள்ளார்கள். இது மட்டும் இல்லாமல், காரை வேகமாக பின் தொடர்ந்து சென்றது மட்டும் இல்லாமல், காரில் உள்ள விக்ரமைப் பார்த்ததும் வீடியோ எடுத்துள்ளார்கள். அப்போது எடுத்த வீடியோ தான் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

அட்வைஸ்: காரை துரத்திய ரசிகர்கள் இருவரும் ஹெல்மெட் போடவில்லை. தனது காரை நிறுத்தி, ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட விக்ரம், தனது ரசிகர்களை ஹெல்மெட் போட்டுக் கொண்டு இரு சக்கர வாகனங்களை ஓட்டும் படி அட்வைஸ் செய்தார். இந்த வீடியோ தற்போது விக்ரம் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications