'விக்ரம்': அவன் பெயருக்குள்ளே வெற்றி உண்டு, உண்மைதானடா #HBDChiyaanVikram
சென்னை: சியான் விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
திறமைக்கு பெயர் போன விக்ரம் இன்று தனது 53வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் நேரிலும், சமூக வலைதளங்களிலும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
வாழ்க்கையே போர்க்களம் வாழ்ந்து தான் பார்க்கணும் என்று வாழ்பவர் விக்ரம்.

போராட்டம்
விக்ரம் நடிக்க வந்த உடனேயே வெற்றி பெறவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். பட வாய்ப்பு இல்லாத நேரத்தில் டப்பிங் பேசினார். நிச்சயம் நல்ல வாய்ப்பு வரும், நான் பெரிய ஹீரோ ஆவேன் என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டார். அவரின் நம்பிக்கை வீண் போகவில்லை. இயக்குநர் பாலா வடிவில் அவரைத் தேடி வெற்றி வந்தது.

சியான்
சேது படம் மூலம் தான் திரையுலகினரை தன் பக்கம் திரும்ப வைத்தார் விக்ரம். அந்த படம் மூலம் அவருக்கு சியான் என்ற பட்டமும் கிடைத்தது. அதன் பிறகு விக்ரமின் படங்களை பார்த்து இப்படி நமக்கு ஒரு படம் கிடைக்காதா என்று முன்னணி நடிகர்கள் ஏங்கிய நிலை வந்தது.

தோல்வி
விக்ரமுக்கு தொடர்ந்து வெற்றிப் படங்கள் கிடைத்தது என்று இல்லை. ஆனால் வெற்றி, தோல்வியை சரிசமமாக பார்க்கும் பக்குவம் அவரிடம் உள்ளது. அந்த பக்குவத்தால் அவர் திரையுலகில் நிலைத்து நிற்கிறார்.

ஹீரோ
விக்ரமுக்கு வெற்றியின் அருமை தெரியும். காரணம் அதற்காக அவர் பட்ட கஷ்டங்கள் அதிகம். அவர் இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால் சினிமாவாவது, மண்ணாவது என்று வேறு தொழில் பார்க்க கிளம்பியிருப்பார்கள். மகன் த்ருவ் ஹீரோவாகிவிட்ட நிலையிலும் அவரும் தொடர்ந்து ஹீரோவாக நடித்து வருகிறார். அப்பாவும், மகனும் ஒரு படத்திலாவது சேர்ந்து நடிக்க வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பம். விக்ரமின் இயற்பெயர் கென்னடி ஜான் விக்டர். அவர் பெயரிலேயே வெற்றி இருக்கும்போது வெற்றி பெறாமலா போய்விடுவார்?


Click it and Unblock the Notifications











