இவரு பெரிய ஜமீன் பரம்பரை.. பொண்டாட்டியை வீட்ல விட்டுட்டு வரவேண்டியது தான.. இர்பானை விளாசிய விஜே பாரு!

சென்னை: யூடியூபர் இர்பான் என்றாலே சர்ச்சை என்றாகிவிட்டது. உணவுகளை ரிவ்யூவ் செய்வதை வாடிக்கையாக கொண்ட இவர், இப்போது பிரபலங்கள், அரசியல்வாதிகள் என பலரையும் பேட்டி எடுக்கும் அளவுக்கு இணையவாசிகள் மத்தியில் பிரபலமாகி விட்டார். இவர் ரம்ஜானை முன்னிட்டு ஏழைகளுக்கு உதவுகிறேன் என செய்த செயல், இணையவாசிகள் மத்தியில் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. இப்படியான நிலையில் இவரது இந்த செயல் குறித்து வி.ஜே. பார்வதி விளாசித் தள்ளியுள்ளார்.

அதாவது யூடியூபர் இர்பான், ஏழைகளுக்கு உதவுகிறேன் என உடைகள் வாங்கிக் கொண்டு தனது மனைவியுடன் சென்னையில் பல்வேறு இடங்களுக்கு சென்று கொடுக்க திட்டமிட்டு அதேபோல் செய்தும் உள்ளார். இதில் சர்ச்சையாக மாறிய விஷயம் என்னவென்றால், இவரும் இவரது மனைவியும் காருக்குள் இருந்து கொண்டே அவர்கள் வாங்கி வந்த உடைகள் மற்றும் உதவிப் பொருட்கள் அடங்கிய, பைகளை ஒவ்வொன்றாக கொடுக்கிறார்கள்.

VJ Paaru Slams Youtuber Irfan and His Wife Activities in Ramzan - Watch

இது தொடர்பாக இர்பான் தனது யூடியூப் சேனலில் வீடியோவை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், " இர்பான் மற்றும் அவரது மனைவி இருவரும் காரில் அமர்ந்து கொண்டு உடைகளை வழங்குகிறார்கள். இவர்கள் உடைகளை வழங்கும் போது சில இடங்களில் சிலர் பொருட்களை வாங்குவதற்காக காருக்குள் கைகளை விடுகிறார்கள். சிலர் தங்களுக்கு கிடைக்காமல் போய்விடுமோ என்ற எண்ணத்தோடு, உடைகள் அடங்கிய பைகளை பிடுங்குவதையும் வீடியோவில் பார்க்க முடிகிறது.

இர்பான்: ஆனால், உதவிப் பொருட்களை வாங்கியவர்கள், காருக்குள் கைகளை விடும் போது, இர்பான் காருக்குள் கைகளை விடவேண்டாம் என காட்டமாக கத்துகிறார். இது மட்டும் இல்லாமல், உதவிப் பொருளை வாங்கும் போது சிலர் அவரது மனைவியை தொட்டு விட்டார்கள் என்றும் அவரது கைகளை பிடித்து இழுத்தார்கள் என்றும் கூறுகிறார். அப்போது, டேய் விடுங்கடா, இது என் பொண்டாட்டிடா என்ற மனநிலையில் தனது மனைவியை காப்பாற்றியதாகவும் கூறுகிறார். இப்படியான உள்ள இந்த வீடியோவுக்கு இணையவாசிகள் பலரும் தங்களது கமெண்ட்களை தெரிவித்து வருகிறார்கள்.

VJ Paaru Slams Youtuber Irfan and His Wife Activities in Ramzan - Watch

ஜமீன் பரம்பரை: இந்த வீடியோ தொடர்பாக வி.ஜே. பார்வதி வெளியிட்டுள்ள வீடியோவில், " இவரு( இர்பான்) பெரிய ஜமீன் பரம்பரை, காருக்குள்ள உட்கார்ந்து கொண்டுதான் இல்லாத மக்களுக்கு சேவை செய்வார். தனது மனைவியை அவ்வளவு பத்திரமாக பார்த்துக் கொள்ளவேண்டும் என நினைப்பவர், அவரது மனைவியை வீட்டிலேயே விட்டுவிட்டு வர வேண்டியதுதானே!. இது போன்ற சமூக நடவடிக்கைகளுக்கு அழைத்துக் கொண்டு வந்திருக்கவே கூடாது. மக்களே!, தயவு செய்து மறைந்த ரத்தன் டாடாவை படியுங்கள். ரத்தன் டாடா தனது வாழ்நாளில் சம்பாதித்த பணத்தை பெருமளவில் இல்லாத ஏழைகளுக்கு கொடுத்துள்ளார். ஆனால் அதை அவர், எந்த ஒரு இடத்திலும் வெளிக்காட்டியதில்லை.

புது பணக்காரன்: ஆனால், இந்த புது பணக்காரங்க இருக்காங்க பாருங்க... எப்பா.. இவனுங்க பண்ற கூத்து இருக்கே!. தன்னிடம் பணம் இருக்கிறது என்பதை எப்படி எல்லாம் கேவலமாக வெளிக்காட்டுகிறார்கள். இப்படியான நேரங்களில் இந்த புது பணக்காரர்களின் புத்தி வெளியே வருகிறது. பெரும்பான்மையான சமூகம் இதுபோன்ற கேவலமான மனநிலையோடுதான் உள்ளது. இந்த மாதிரியானவர்களை நாம் புரோமோட் செய்து கொண்டு இருக்கிறோம். நாடு நாசமாக போக வாழ்த்துகள்" என இர்பானின் நடவடிக்கைகள் குறித்து காட்டமாக விமர்சித்து வீடியோ வெளியிட்டுள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

VJ Paaru Slams Youtuber Irfan and His Wife Activities in Ramzan - Watch

More from Filmibeat

Read more about: irfan watch video irfan view
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X